கோலாலம்பூர், ஆக. 07: நாடாளுமன்ற அமர்வின் கூட்டத் தொடரின் போது மின்புகை (vaping)
பிடித்த வெளியுறவு அமைச்சர் தனது தவறுக்காக மன்னிப்பு கோரினார்.கடந்த திங்கட்கிழமை
நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது வெளியுறவு அமைச்சரான டத்தோஶ்ரீ ஹிஷாமுடின்
முன்புகை பிடித்தது தெரிய வந்தநிலையில் அவர் அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பும்
கோரினார்.
நாடாளுமன்றத்தில் எந்தவொரு உறுப்பினரும் கூட்டத்தொடரில் அமர்ந்திருக்கும் போது
புகைபிடிக்கக்கூடாது என்பது வரையறை. இருந்த போதிலும் இத்தவற்றை இனி செய்ய
மாட்டேன் என உறுதி அளிப்பதாகவும் அவர் மேலும் கூறினார். அதேவேளையில், தனது
டிவிட்டரில்,”மன்னிக்கவும்,நான் உணரவில்லை – இது ஒரு புதிய பழக்கம்” எனவும் அந்த
மன்னிப்பில் அவர் பதிவு செய்திருந்தார்.
மின்புகை பிடித்த அமைச்சர் மன்னிப்பு கோரினார்!!

No Comment