கற்றறிந்த சமூகமாக மாறுங்கள் – கல்வியில் சிறந்து விளங்குங்கள்!! (சிவாலெனின்)


புந்தோங்,ஆக07: நம் சமூகத்தின் நாளைய நம்பிக்கைகளான இளம் தலைமுறை கற்றறிந்த
சமூகமாய் மாற வேண்டும் என நினைவுறுத்திய புந்தோங் சட்டமன்ற உறுப்பினர்
ஆதி.சிவசுப்பிரமணியம் கல்வியில் சிறந்து விளங்குவதை முதன்மை இலக்காகவும் நம் இளம்
தலைமுறையினர் கொண்டிருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
நாம் பொருளாதார ரீதியில் தனித்துவத்தை பெற வேண்டுமானாலும் இந்நாட்டில் கல்வி கற்ற
சமூகமாக மாறினால்தான் அஃது பெரும் சாத்தியமாகும் எனவும் கூறிய அவர் புந்தோங் வாழ்
இளைஞர்ளின் கல்வி பயணத்திற்கு தாம் எப்பவுமே துணையாகவும் தூண்டுக்கோளாகவும்
இருப்பேன் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
உயர்க்கல்விக்காக உதவிகள் தேவைப்படும் இளம் தலைமுறைக்கு உதவுவதற்கும்
வழிகாட்டவும் தாம் தயாராக இருப்பதாகவும் அதற்காகவே தனது புந்தோங் சேவை மையம்
இங்கு செயல்படுவதாகவும் மேலும் கூறினார்.வட்டார மக்களின் பிரச்னைகள் மற்றும்
தேவைகளுக்கு முதன்மை அளிப்பது போல் ஆரம்பப்பள்ளி முதல் உயர்க்கல்வி வரையில்
மாணவர்களின் தேவைகளும் கண்டறியப்பட்டு உதவுவதாக கூறினார்.
உயர்க்கல்வியை மேற்கொண்டிருக்கும் 7 மாணவர்களுக்கு கல்வி நிதியுதவி வழங்கிய
சிவசுப்பிரமணியம் மேற்கண்டவாறு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.நாட்டின் வருங்கால
சவால்களை சமாளிக்க நம் மாணவர்கள் உயர்க்கல்வியில் தனித்துவ சிறப்பினை எட்ட
வேண்டும் எனவும் குறிப்பிட்ட சிவசுப்பிரமணியம் கல்வியை கவனத்தோடு கற்று
முன்னேறுமாறும் மாணவர்களுக்கு வேண்டுக்கோள் விடுத்தார்.
புந்தோங் சேவை மையத்தில் நடந்தேறிய கல்விநிதியுதவி வழங்கும் நிகழ்வில் மாணவர்களும்
அவர்களது பெற்றோர்களும் உதவிநிதியினை பெற்று சென்றதோடு தேவை அறிந்து உடனடி
உதவிகளை செய்து வரும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினருக்கும் அவரது சேவை மைய
பணியாளர்களுக்கும் நன்றியினை பதிவு செய்தனர்.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *