வீடுதேடி சென்று மருத்துவ உதவிநிதி வழங்கினார் சிவசுப்பிரமணியம்!!


புந்தோங்,ஆக05:உதவியென கேட்போர்க்கு உதவுவதையே தனது சேவையின் அடையாளமாக கொண்டிருக்கும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் உதவி பெறுவோரை நேரடியாக வீட்டில் சென்று உதவிநிதி வழங்குவதையும் தனது பாணியாக அவர் கொண்டிருக்கிறார்.

இம்மாதிரி உதவிகளை நேரடியாக வீடு தேடி சென்று கொடுக்கும் போது சம்மதப்பட்டவர்களின் குடும்ப சூழலையும் அறிந்துக் கொள்ள முடிவதோடு அவர்களுக்கு தேவையான சேவையை நிறைவாக வழங்கவும் அஃது வழிசெய்வதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தனது அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி கோரிய வி.அரிவழகனுக்கும் புற்றுநோய்க்கான தீவிர சிகிச்சையை மேற்கொண்டு வரும் திருமதி.ரெஜினாமேரிக்கும் தேவையான மருத்துவ நிதிஉதவியை வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.

மக்களின் தேவை அறிந்து உதவுவதே தனது பாணி எனவும் கூறிய அவர் உதவினு வருவோர்க்கு தேவையான உதவியை நிறைவாய் வழங்க வேண்டும் என்பதில் தாம் எப்பவுமே தனி கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.புந்தோங் தொகுதியை பொருத்தமட்டில் மக்களின் தேவைகள் நிறைவாகவே பூர்த்தி செய்யப்பட்டு வருவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதேவேளையில்,ஒவ்வொரு நாளும் மக்களின் தேவைகளை அறியவும் அவர்களின் பிரச்னைகளை கண்டறியவும் புந்தோங் மார்கெட் உட்பட பல இடங்களுக்கு தாம் நேரடியாக சென்று வருவதாகவும் தனது ஒவ்வொரு நாளை மக்கள் சந்திப்பிற்காக அலுவலகத்தில் காத்திருப்பதாகவும் கூறிய அவர் மக்களின் சேவை தனது கடமை எனவும் கூறினார்.

சிவசுப்பிரமணியத்திடம் மருத்துவ நிதி உதவி பெற்றுக் கொண்ட அவ்விருவரும் நன்றி கூறியதோடு மட்டுமின்றி எங்களின் நிலை அறிந்து உடனடியாக உதவியை வழங்கிய அவரது சேவை என்றுமே தனித்துவமானது என குறிப்பிட்டனர்.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *