சிலிம் ரீவரில் 40 விழுக்காடு இளைஞர்கள் வாக்கு – அம்னோ இளைஞர் பிரிவுக்கு வாய்ப்பா?


சிலிம் ரீவர்,ஆக06:நடைபெறவிருக்கும் சிலிம் ரீவர் இடைத்தேர்தலில் அம்னோ வேட்பாளர் யார் எனும் கேள்விக்கான விடை தெரியாமல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தொகுதி இளைஞர் பிரிவு தலைவருக்கு அவ்வாய்ப்பு கிட்டலாம் என நம்பப்படுகிறது.

இத்தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமாய் இளைஞர்களின் வாக்குகள் இருப்பதால் அம்னோ தொகுதி இளைஞர் பிரிவு தலைவர் முகமாட் அமீன் பின் ஓத்மானுக்கு அவ்வாய்ப்பை வழங்க கட்சி தலைமைத்துவம் ஆலோசித்து வருவதாகவும் நம்பப்படுகிறது.

இளைஞர்களின் வாக்குகளை கவர இந்த பாணி மிகவும் அவசியமென அம்னோ கருதுவதால் தொடர்ந்து நீண்டக்காலமாய் இத்தொகுதி அம்னோ இளைஞர் பிரிவின் தலைவராக இருக்கும் அமினுக்கு இம்முறை வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிலிம் ரீவர் இடைத்தேர்தலுக்காக அம்னோ பட்டிலிட்ட பெயர்களில் அமினின் பெயரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கும் பல்லின மக்களின் ஆதரவை பெற்றிருக்கும் அமினுக்கு வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக கூறப்படும் அதேவேளையில் அம்னோ உட்பட கூட்டணி கட்சிகளின் ஆதரவும் அமினுக்கு சிறப்பாகவே உள்ளது.

சிலிம் ரீவர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கால் வரும் 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் இன்னமும் யார் வேட்பாளர் என அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.இருந்த போதிலும் தனக்கு அவ்வாய்ப்பு வழங்கப்படலாம் எனும் நம்பிக்கையில் அமின் மக்களை சந்திப்பதும் தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பணியிலும் தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

வட்டார் இளைஞர்களுக்கு நன்கு அறிமுகமான அமின் சிலிம் ரீவர் சட்டமன்றத்தை தொடர்ந்து அம்னோ அதன் கோட்டையாக வைத்திருக்கு இளைஞர்களின் ஆதரவை அம்னோவிற்கும் தேசிய முன்னணிக்கும் சாதகமாக்கியதில் தனித்துவமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.வட்டார இளைஞர்களிடம் அமினுக்கு ஆதரவு உண்டா என வினவிய போது அமினுக்கு இளைஞர்களின் ஆதரவு எப்பவுமே உண்டு என முழக்கமிட்டனர்.

நாட்டில் நடைபெற்ற அரசியல் மாற்றம்,குழப்பங்களுக்கு பின்னர் நடைபெறும் சிலிம் ரீவர் இடைத்தேர்தலில் அம்னோ வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்கள் வெற்றி பெற அமின் சிறந்த தேர்வாக இருக்கும் என வட்டார அம்னோவும் இளைஞர்களும் நம்புகிறார்கள்.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *