புந்தோங்,ஜூலை27:தனது சேவை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சிறந்த நிலையில் இருப்பதால் தாம் மக்களின் மனங்களில் உயர்ந்து நிற்பதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் பெருமிதமாக குறிப்பிட்டார்.தாம் ஜசெகவிலிருந்து வெளியேறியது குறித்து புந்தோங் வாழ் மக்கள் கவலை கொள்ளவில்லை எனவும் அவர்கள் தனது சேவையில் தொடர்ந்து நிறைவாக இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
நேற்று புந்தோங் மார்கெட் பகுதியில் மக்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மக்களின் ஆதரவு தொடர்ந்து நல்விதமாக இருப்பதாகவும் அவர்கள் தன்னை பெருமளவில் ஆதரித்தும் தொடர்ந்து இத்தொகுதியில் போட்டியிடுமாறும் கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.கட்சி குறித்து கவலைப்படாமல் சேவை செய்வோருக்கும் மக்களிடையே ஆதரவு இருப்பதை இது சுட்டிக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.
புந்தோங் மார்கெட் வியபாரிகள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்னைகளுக்கு தாம் தீர்வு கண்டிருக்கும் நிலையில் அவர்களின் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கும் உன்னத சேவையாளனாக தன்னை பார்ப்பதாகவும் குறிப்பிட்ட சிவசுப்பிரமணியம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட தாம் மக்களுக்கு சேவை செய்வதையே பெரும் கடமையாக கருதுவதாக கூறினார்.
இதற்கிடையே,எங்களுக்கு கட்சி முக்கியமில்லை,அவரது சேவையே போதுமென அங்கிருந்த பொதுமக்களும் வியபாரிகளும் கருத்துரைத்த நிலையில் அவர் மீண்டும் புந்தோங்கில் போட்டியிட வேண்டும்,எங்களின் ஆதரவு அவருக்குத்தான் எனவும் கூறியது பெரும் நெகிழ்ச்சியை உருவக்கியதாகவும் சிவசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புந்தோங் தொகுதியில் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான சேவையையும் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வும் ஏற்படுத்தி வருவதாக கூறிய சிவசுப்பிரமணியம் தாம் அலுவலகத்தில் அமர்ந்துக் கொண்டு காலாட்டும் சட்டமன்ற உறுப்பினர் அல்ல.மாறாய்,மக்களை நேரடியாக சந்தித்து பிரச்னைகளை கேட்டறிந்து அதற்கு தீர்வு காண்பதையே இலக்காக கொண்டிருப்பதாக கூறினார்.
மக்களுக்காக எனது சேவை மையம் எப்பவுமே திறந்தே இருக்கும்,அவர்கள் எந்நேரமும் தங்களின் தேவைக்காக என் சேவையை நாடலாம் என்றும் தெரிவித்த அவர் புந்தோங் வாழ் மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணவே தாம் மக்களால் இங்கு தேர்வு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
முன்னதாக,கோவிட்-19 தொற்றின் காரணமாக மக்களின் இயல்புவாழ்வு நிலை தற்போது சுமுகமாக இருந்தாலும் பொது மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம் என்றும் முகக்கவரி அணிவதை வழக்கப்படுத்திக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.அதேவேளையில்,புந்தோங் மார்கெட் உட்பட பொது இடங்களின் சுற்றுச்சூழல் பாதுகாப்பை தாம் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
No Comment