சிலிம் ரீவர் சட்டமன்றத்தை கோருவது நமது ஒற்றுமையை பாதிக்கும் – சமூக சேவையாளர் அர்ஜூணன் வலியுறுத்து!!


சிலிம் ரீவர்,ஜூலை21: சிலிம் ரீவர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ம இ கா போட்டியிட
வேண்டும் என ம இ கா தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுவது,நமக்கும் அம்னோவிற்கு
இடையிலான ஒற்றுமையை பாதிக்க செய்யும் என சமூக சேவையாளர் திரு.மு.அர்ஜூணன்
தெளிவுப்படுத்தினார்.
சிலிம் ரீவர் சட்டமன்றம் தொடர்ந்து அம்னோவின் கோட்டையாகவே இருந்து
வந்துள்ளது.இந்நிலையில்,அத்தொகுதி இடைத்தேர்தலில் ம இ கா போட்டியிட வேண்டும்
என்பது ஏற்புடையதாக இருக்காது.இது நமக்கும் அம்னோவிற்கும் இருக்கும் வலுவான
உறவிற்கு பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில்,அம்னோவின் தொகுதியை நாம் கோருவது தேவையற்ற மன கசப்பினை
உருவாக்க வாய்ப்பு உள்ளது.இத்தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் நாம்
அம்னோ வேட்பாளரின் வெற்றிக்கு வழி செய்யும் அதேவேளையில்,நாம் இதற்கு முன்னர்
அம்னோவிற்கு விட்டுக் கொடுத்த பேராங் தொகுதியை மீண்டும் கோருவதில் ஒரு நியாயம்
இருப்பதாகவும் ம இ கா பத்து தீகா கிளைத்தலைவருமான அர்ஜூணன் பிஜெகே,பிபிஎன்
அவர்கள் குறிப்பிட்டார்.
நடப்பில் ,நம்மை வீழ்த்தி தேசிய முன்னணியில் ஒட்டிக் கொள்வதற்கும் செல்வாக்கு
பெறுவதற்கும் வெளியில் பல கட்சிகள் காத்திருக்கின்றனர்.இந்நிலையில்,நாம் சிலிம் ரீவர்
தொகுதியை கேட்பது குறித்து அம்னோவிடம் தவறான கருத்தினை புகுத்தி சிலிம் ரீவர்
தொகுதியில் ம இ காவை அம்னோவிற்கு அந்நியமாக்க சிலர் முனைந்து வருவதையும்
சுட்டிக்காண்பித்த அவர் இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளரின் வெற்றியே நமது
முதன்மை இலக்காக இருக்க வேண்டும் என்றார்.
மாநில அரசாங்கத்தில் இந்திய பிரதிநிதி இல்லை.அதனை ஈடுசெய்ய சிலிம் ரீவர்
சட்டமன்றத்தில் ம இ கா பிரதிநிதி போட்டியிட வேண்டும் என்பது சிறந்த ஆலோசனையாக
இருந்தாலும்,அஃது தற்போதைய சூழலில் ஏற்புடையதாக இல்லை.மாறாய், இந்தியர்களின்
ஆதரவை ம இ கா பெற்றுள்ளது என்பதை உறுதி செய்யும் வகையில் சிலிம் ரீவர்
இடைத்தேர்தலில் இந்தியர்களின் பெரும்பான்மையை வாக்கினை தேசிய முன்னணிக்கு
கொண்டு வருவதையே நாம் இலக்காக கொள்ள வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.
நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் ம இ கா வெற்றி பெற சாத்தியமான தொகுதிகளை குறி
வைத்து டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வரும்
நிலையில் நாம் தற்போது சிலிம் ரீவர் தொகுதியை குறி வைப்பது தேவையற்ற குழப்பத்தை
உருவாக்க வாய்ப்பு உள்ளது எனவும் ஆலோசனை வழங்கினார்.
அதுமட்டுமின்றி, நடப்பு அரசியல் சூழலில் நாம் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில் இடம்
பெற்றுள்ளோம்.நாட்டின் அரசியல் சூழலும் இன்னும் ஆரோக்கியமான நிலைக்கு
எட்டவில்லை.எனவே, நாம் நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து
வியூகம் அமைக்க வேண்டும்.பொதுத் தேர்தலில் நாம் பெறும் வெற்றிதான் நம்மை தொடர்ந்து
நம்பிக்கையான அரசியலை முன்னெடுத்து செல்ல பெரும் பங்காற்றும் எனவும் கூறினார்.
நாட்டு அரசியலிலும் அரசாங்கத்திலும் நாம் நிலையான மற்றும் வலுவான இடத்தை நிறப்ப
வேண்டுமானால் நாட்டின் 15வது பொதுத் தேர்தல் வெற்றியே நமது இலக்காக இருக்க வேண்டும்.சிலிம் ரீவர் இடைத்தேர்தல் இந்தியர்கள் ம இ கா மீது கொண்டிருக்கும் வலுவான
நம்பிக்கையை மெய்பிக்கும் களமாக உருவெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்
கொண்டார்.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *