சிலிம் ரீவர் தொகுதியை அம்னோ விட்டுக் கொடுக்காது!!


சிலிம் ரீவர்,ஜூலை21: சிலிம் ரீவர் சட்டமன்ற தொகுதியை அம்னோ யாருக்கும் விட்டுக்
கொடுக்காது என அத்தொகுதியை சார்ந்த அம்னோவினர் உறுதியாக கூறி வருகின்றனர்.இது
அம்னோவின் பாரம்பரிய தொகுதி.இத்தொகுதியில் அம்னோதான் போட்டியிடும் என
கூறுகிறார்கள்.
அண்மையில், இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ குஷாரி அவர்கள் மரணமுற்றதை
தொடர்ந்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற சாத்தியம் இருப்பதால் இத்தொகுதி
மீது பல்வேறு அரசியல் கட்சிகள் குறி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில்,நடைபெறவிருக்கும் சிலிம் ரீவர் சட்டமன்ற தொகுதியில் ம இ கா போட்டியிட
வேண்டும் எனும் கோரிக்கை வலுவடைந்து வரும் நிலையில் அம்னோ அத்தொகுதியை ம இ
காவிற்கு விட்டுக் கொடுக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் மாநில,தேசிய நிலையிலான
தலைவர்கள் கோரிக்கை விடுத்தும் வருகிறார்கள்.
கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் அத்தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தனது ஆளுமையை
டத்தோ குஷாரி வலுப்படுத்தி வைத்திருந்த நிலையில் அத்தொகுதி அம்னோவின்
கோட்டையாகவே உருமாறி விட்டது.கடந்த 14-வது பொதுத் தேர்தலில் தஞ்சோங் மாலிம்
நாடாளுமன்றம் உட்பட அதன் சட்டமன்றங்களான பேராங், சுங்கை மற்றும் சிலிம் ரிவரில்
‘சிலிம் ரீவர்’ சட்டமன்றத்தில் மட்டுமே தேசிய முன்னணி வெற்றி பெற்றது என்பது
குறிப்பிடத்தக்கது.
மலாய் வாக்காளர்களின் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருக்கும் இத்தொகுதியில்
அம்னோ அதன் ஆளுமையோடு இருக்கும் சூழலில் இத்தொகுதியை அது விட்டுக்
கொடுக்காது என்பது அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் ஆழமாய் பேசப்படும்
உண்மையாகும்.எனவே,சிலிம் ரீவர் தொகுதியில் மீண்டும் அம்னோதான் போட்டியிடும்
என்பதில் ஐயமில்லை என்று அம்னோவினர் பேசுகிறார்கள்.
நடப்பு அரசியல் சூழலின் கீழ் சிலிம் ரீவரில் பெரிக்காத்தான் நேசனல் சார்பில் அம்னோவும்
பாக்காத்தான் ஹராப்பான் தரப்பில் கெ அடிலான் வேட்பாளர் களமிறங்க கூடும் எனவும்
நம்பப்படுகிறது.

Suggested Posts

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *