டான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரனுக்கு உயரிய பதவியை பிரதமர் வழங்க வேண்டும் – எஸ் .பி.மணிவாசகம் அறைகூவல்!!


கோலாலம்பூர்,ஜூன்28:உலகளாவிய ரீதியில் மூன்று மாமன்னர்கள், மூன்று பிரதமர்கள் மற்றும் மூன்று வெவ்வேறு அரசாங்கங்களோடு மேலவைத் தலைவராக செயல்படுவது சரித்திரப்பூர்வமான , விழிகளை வியப்பூட்டும் வினோதமாகும்.

இந்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் மலேசிய நாடாளுமன்ற மேலவையின் தலைவரும் ,மலேசியன் இந்திய காங்கிரஸின் தலைவருமாகிய டான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் ஆவார்.

சிறந்த நிர்வாகத் திறனாலும், சபையை கட்டுக்கோப்பாக வழி நடத்திய கட்டுப்பாட்டாலும்,சர்வதேச அரங்கில் தனி மரியாதையைப் பெற்று மலேசிய நாட்டுக்கு உயரிய கௌரவத்தை பெற்றுத்தந்துள்ளார் என்பது வெள்ளிடைமலையாகும்.

இவரின் மேலவைத் தலைவர் பதவி ஜூன் மாதம் முடிவடைந்த தருணத்தில், பிரதமர் முகியுடின் யாசின் டான்ஶ்ரீ விக்னேஸ்வரனுக்கு மிக உயரிய பதவியை வழங்கி சிறப்பிக்க வேண்டும் என மஇகா முன்னாள் மத்திய செயலவை உறுப்பின்
எஸ் .பி.மணிவாசகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தகைய நியமனம் இந்திய சமுதாயத்திற்கு கிடைத்திடும் மிகப் பெரிய அங்கீகாரமாக அமைவதோடு, உலக அரங்கில் ஒரு சரித்திரப்பூர்வ கௌரவமாய் பெயர் சொல்லும் என மணிவாசகம் வர்ணித்தார்.
இந்த உயரிய நியமனத்தை இந்திய சமுதாயம் ஆவலுடன் எதிர்பார்க்கின்றது என்பதனை பிரதமர் கவனத்தில் கொண்டு சிறந்த முடிவை எடுப்பார் என எஸ்.பி.மணிவாசகம் நம்பிக்கை தெரிவித்தார்.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *