சிங்கப்பூரை போல நாடாளுமன்றத்தை கலைத்துவிடவும் – வீரன்!!


தைப்பிங்,ஜூன்26:சிங்கப்பூரை முன்மாதிரியாக கொண்ட நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நாடாளுமன்றத்தை கலைப்பதே விவேகம் என ம இ காவின் மத்திய செயல்குழு உறுப்பினர் எம்.வீரன் கோரிக்கை விடுத்தார்.
நாட்டின் இன்றைய நிலையில்லா அரசியல் போக்கினால் மக்களின் வாழ்வாதாரம் உட்பட நாட்டின் பொருளாதாரமும் சரியான இலக்கை நோக்கி பயணிக்க முடியாமல் நகர்ந்துக் கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டிய அவர் நிலையான அரசாங்கத்தை தேர்வு செய்ய மக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
தற்போதைய சூழலில் நாட்டின் நிலையற்ற அரசியல் தன்மையால் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ள சூழலில் இந்நிலை தொடர்ந்தால் நாம் இன்னும் மோசமான விளைகளை எதிர்நோக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரித்த தைப்பிங் தொகுதி துணைத்தலைவருமான வீரன்,இச்சிக்கலுக்கு தீர்வுகாண பொதுத் தேர்தலே சிறந்த வழியெனவும் குறிப்பிட்டார்.
நாட்டில் நிலையான அரசாங்கம் அமைந்தால் தான் அந்நிய முதலீடு உட்பட அனைத்து செயல்பாடுகளும் நம்பிக்கையாக தொடரும் எனவும் கூறிய அவர் நாட்டின் 15வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் வகையில் நடப்பு அரசாங்கம் நாடாளுமன்றத்தை கலைப்பதே இன்றைய சூழலில் விவேகமானது என்றும் மேலும் கூறினார்.
நாடு சுதந்திரம் பெற்றது முதல் நாம் ஒரு நிலையான அரசாங்கம் அமையாமல் இருந்ததில்லை.ஆனால்,முதன்முறையாக அவ்வாறான சூழலை எதிர்நோக்கும் போது நாம் அதனை விவேகமாக கையாள நாடாளுமன்றத்தை களைத்து விட்டு ஜனநாயக முறையில் மக்களின் தேர்விற்கு வழிவிட வேண்டும் என்றார்.நாட்டின் பிரதமர் டான்ஶ்ரீ முகிடின் யாசின் இதனை கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தை கலைப்பார் என எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
மேலும்,நாட்டின் அரசியல் தன்மையால் மக்களும் விரக்தியில் இருப்பதை சுட்டிக்காண்பித்த வீரன் நாட்டு மக்களும் அரசியல் ஆர்வலர்களும் நடப்பில் அரசியல் மீது ஆர்வமின்றி இருப்பதாகவும் கூறினார்.அம்னோவின் தேசிய துணைத்தலைவர் டத்தோஶ்ரீ முகமாட் அசான் முன்னதாக பொது தேர்தலுக்கு வழிவிட்டு நாடாளுமன்றத்தை கலைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அதனை ஆதரிக்கும் நிலையில் வீரன் இவ்வாறு கருத்துரைத்தார்.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *