சுங்கை சட்டமன்றத்தில் போட்டிப் போட பாஸ் ஆர்வம்!!


 

சுங்கை,ஜூன்24: நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் மீண்டும் சுங்கை சட்டமன்றத்தில் போட்டியிட பாஸ் ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது.

கடந்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி,ஹராப்பான் கூட்டணியோடு பாஸ் கட்சியும் களமிறங்கியது குறிப்பிடத்தக்கது.

அக்கட்சியின் சார்பில் பாஸ் பேரவையின் முதன்மை தலைவர்களில் ஒருவரான ஜெ.அப்பளசாமி போட்டியிட்டார்.

அத்தேர்தலில் பாஸ் தோல்வியுற்றிருந்தாலும் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிட பாஸ் ஆர்வம் காட்டும் அதேவேளையில் நடப்பு அரசியல் சூழலில் பாக்காத்தான் ஹராப்பானை வெல்வது எளிது என்றும் அக்கட்சியினர் நம்புகின்றனர்.

நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் பாஸ் – தேசிய முன்னணி கூட்டணி ஒன்றாக களமிறங்குவதால் பாஸ் சுங்கையில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவும் பாஸ் பேரவையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *