6 மாதங்களுக்கு பின்னர் அன்வார் பிரதமரா?


கோலாலம்பூர்,ஜூன்23:நாங்கள் இன்னமும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ஆதரிப்பதாகவும் துன் மகாதீர் பிரதமர் பதவி ஏற்ற 6 மாதங்களுக்கு பிறகு அஃது அன்வாரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனவும் ஜசெகவும் அமானாவும் தெரிவித்தன.

6 மாதங்களுக்கு பிறகு பிரதமர் பதவி ஒப்படைப்பு ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் எனவும் ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அமானா கட்சியின் தலைவர் மாட் சாபுவும் கூட்டாக குறிப்பிட்டார்கள்.

நடப்பியல் சூழலில் பாக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தை கைப்பற்ற இதுவொரு சாதுரியமான வழியெனவும் தெரிவித்த அவர்கள் கடந்த 1998முதல் நாங்கள் அன்வாரை ஆதரித்து வருவதாகவும் கூறினார்கள்.

புத்ராஜெயாவை கைப்பற்ற நடப்பில் பாக்காத்தான் ஹராப்பான் வாரிசான் மற்றும் துன் மகாதீருடன் கைகோர்ப்பதே விவேகமானது என்றும் கூறிய அவர்கள் துன் மகாதீர் பதவியேற்ற அடுத்த 6 மாதத்தில் அன்வார் பிரதமராவார் என்றனர்.

இருப்பினும்,கெஅடிலான் கட்சி தொடர்ந்து இக்கோரிக்கையை நிராகரித்து வருகிறது.அக்கட்சி அன்வாரை பிரதமர் வேட்பாளராய் முன்நிறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அதேவேளையில்,துன் மகாதீர் அன்வார்க்கு துரோகம் இழைத்து விட்டதாகவும் இனி அவரை நம்புவது அர்த்தமற்றது எனகும் அக்கட்சி ஆதரவாளர்கள் கருத்துரைக்கிறார்கள்.

ஜசெக மற்றும் அமானாவின் இம்முடிவினால் பாக்காத்தான் ஹராப்பான் உடையுமெனவும் கெஅடிலான் அக்கூட்டணியிலிருந்து விலகவும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டத்தில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *