ஈப்போ,ஜூன்22: புந்தோங் சட்டமன்ற தொகுதி சேவை மையத்தின் சிறப்பு அதிகாரி அ.கணேசன் மீண்டும் கவுன்சிலராக இன்று பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
பாக்காத்தான் ஹராப்பான் ஆட்சியின் போது ஈப்போ மாநகர ஊராட்சியில் கவுன்சிலராக பதவி வகித்த கணேசன் புதிய பெரிக்காத்தான் கூட்டணி அரசாங்கத்திலும் கவுன்சிலராக இன்று பதவியேற்றார்.
புந்தோங் வட்டாரத்தில் மட்டுமின்றி ஈப்போ அதன் சுற்றுவட்டாரத்தில் மாநகர மன்றத்திற்கு உட்பட்ட பிரச்னைகளை களைந்து மக்களின் தேவைகளை இதற்கு முன்னர் இவர் ஆக்கப்பூர்வமாக முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் கவுன்சிலராக தேர்வு பெற்ற இவர் தொடர்ந்து மக்களின் அடிப்படை பிரச்னைகளில் கவனம் செலுத்தப்படும் என்றார்.
அதேவேளையில்,மாநகர மன்றத்தின் மூலம் மக்களுக்கு உருவாக்கப்பட்டிருக்கும் வாய்ப்புகள் மற்றும் சலுகைகள் மக்களிடம் எடுத்து சொல்லப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
புந்தோங் வட்டராத்தில் ஊராட்சித்துறை சம்மதப்பட்ட பிரச்னைகளுக்கு தன்னையோ அல்லது புந்தோங் சட்டமன்ற சேவை மையத்தையோ அணுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
No Comment