ஈப்போ,ஜூன்22: பேரா மாநில ம இ காவின் நடப்பு இளைஞர் பகுதி தலைவரும் முன்னாள் இளைஞர் பகுதி தலைவரும் ஊராட்சி மன்ற உறுப்பினர்களாய் அக்கட்சியால் நியமனம் செய்யப்பட்டது.
மாநிலத்தின் நடப்பு இளைஞர் பகுதி தலைவர் எஸ்.ஜெயகணேஸ் ஈப்போ மாநகர மன்றத்தில் கவுன்சிலராக நியமிக்கப்பட்டார்.
அதேவேளையில்,மாநிலத்தின் முன்னாள் இளைஞர் பகுதி தலைவரான நேருஜி கோலாகங்சார் ஊராட்சி மன்றத்தில் கவுன்சிலராக நியமிக்கப்பட்டார்.
இம்முறை பேரா மாநிலத்தில் ம இ கா நியமனம் செய்த ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் இளைஞர்களுக்கு பெரும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நியமனம் செய்யப்பட்ட இவ்விருவரும் கட்சியின் வளர்ச்சிக்கும் இளைஞர்களின் மேம்பாட்டிற்கும் மட்டுமின்றி சமூகத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து சேவை ஆற்றி வருபவர்கள் ஆவர்.
எங்களின் சேவை அறிந்து நியமனம் செய்த மாநில ம இ கா தலைவர் டத்தோ இளங்கோவிற்கும் தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறிய அவர்கள் மக்கள் பிரச்னையில் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் எனவும் கூறினார்கள்.
No Comment