பேராக்கில் டெங்கி 200 விழுகாடு உயர்வு!!


ஈப்போ,ஜூன்20: இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் பேராக் மாநிலத்தில் டெங்கி சம்பவ எண்ணிக்கை 200 விழுகாடு உயர்ந்துள்ளது.

இச்சம்பவ உயர்வு ஈப்போ மாநகரத்தை மையப்படுத்திய பகுதிகளில் தான் அதிகம் உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடந்தாண்டில் இதே காலக்கட்டத்தில் 262 சம்பவங்களாய் இருந்த நிலையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 888 ஆக உயந்திருப்பதாக மாநில சுகாதாரம்,அறிவியல்,சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தொழில்நுட்பத்திற்காக ஆட்சிக்குழு உறுப்பினர் அமாட் சைடி முகமாட் டவுட் குறிப்பிட்டார்.

கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் எந்தவொரு மரண சம்பவமும் பதிவாகாத நிலையில் இவ்வாண்டு ஒரு மரண சம்பவமும் நிகழ்ந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மேலும்,டெங்கி சம்பவம் குறித்த 93 பகுதிகளை ஈப்போ மாநகர மன்றத்தில் அடையாளம் கண்டிருப்பதாகவும் தெரிவித்த அவர் சுற்றுச்சூழல் தூய்மையிலும் பாதுகாப்பிலும் அனைத்து தரப்பும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

கோவிட்-19இன் காரணியமாய் பாதுகாப்பு நடவடிக்கையில் சற்று தோய்வு இருந்ததாக சுட்டிக்காண்பித்த அவர் தற்போது தூய்மைப்படுத்தும் பணி முடக்கி விடப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

அதேவேளையில்,பொது மக்கள் வாரத்திற்கு 10 நிமிடம் ஒதுக்கி சுற்றுச்சூழலை தூய்மை செய்தலின் மூலம் ஏடிஸ் கொசுக்களை ஒழித்து டெங்கி பரவலை தடுக்க முடியும் என்றும் அறிவுறுத்தினார்.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *