இடைத்தேர்தலில் போட்டியிட பாரிஸன் நேஷனல் வேட்பாளராக மொஹமட் ஷரீம் எம். டி. ஜெய்ன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஒரு நல்ல தேர்வாகும் என சின்தா மலேசியா (பிசிஎம்) தேசிய உச்சமன்ற உறுப்பினர் முரளி பாலா தெரிவித்தார்.
பெக்கான் அம்னோ தொகுதியின் செயற்குழு உறுப்பினரான மொஹமட் ஷரீம் ஓர் அனுபவிக்கவர். அரசியலில் அவரது ஈடுபாடும் தலைமைத்துவமும் ஃபெல்டா இளைஞர் பேரவை கூட்டுறவு மற்றும் பஹாங் இளைஞர் பேரவை போன்றவைகளில் பிரதிபலிக்கிறது.”
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ அபுபக்கர் ஹருனின் சிறப்பு அதிகாரியாக இவர் , சினி மக்களுக்கு சிறப்பாக சேவை செய்வார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார் முரளி பாலா.
சினி இடைத்தேர்தலுக்கான நியமனம் இன்று ஜூன் 20 மற்றும் வாக்களிக்கும் நாள் ஜூலை 4 ஆம் அன்றும் நடைபெறும்.
அபூபக்கர் ஹருன் (வயது60), மே 7ம் தேதி அன்று மாரடைப்பால் இறந்ததை தொடர்ந்து இத்இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
No Comment