துன் மகாதீர் பிரதமர் வேட்பாளரா? நிராகரித்தது கெஅடிலான்!!


கோலாலம்பூர்,ஜூன்19:மீண்டும் துன் மகாதீர் பிரதமர் வேட்பாளர் என்னும் பரிந்துரையை கெஅடிலான் கட்சி தலைமைத்துவமும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிராகரித்தனர்.

இன்று நடைபெற்ற இயங்கலை கூட்டத்திற்கு பின்னர் அதன் தலைமைத்துவம் இதன் அறிவித்தது.மேலும்,டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தான் பிரதமர் வேட்பாளர் என்பதையும் அது தெரிவித்தது.

இம்முடிவு கட்சியின் ஒருமனதான முடிவு என்றும் தெரிவிக்கப்பட்ட நிலையில்,துன் மகாதீர் உட்பட அனைத்து தரப்பினருடன் இது தொடர்பில் கலந்து பேசவும் தயாராக இருப்பதாகவும் அக்கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக,துன் மகாதீரை பிரதமர் வேட்பாளர் பரிந்துரையை ஜசெகவும் அமானா ஏற்றுக் கொண்டதாக ஜசெகவின் தலைவர்களில் ஒருவரான அந்தோணி லோக் தெரிவித்திருந்தார்.இப்பரிந்துரை கெஅடிலான் தரப்பில் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் 14வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஆட்சி அமைத்தால் ஆறு மாதம் மட்டுமே பிரதமராக இருந்து விட்டு பின்னர் அப்பதவியை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்யிடம் ஒப்படைக்கப்படும் என்னும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால்,துன் மகாதீர் அவ்வாறு பதவியை ஒப்படைக்கவில்லை.இந்நிலையில்,கெஅடிலான் இனியும் மகாதீரை நம்புவதற்கு தயாராக இல்லை என்பது அவர்களின் இம்முடிவு காட்டுகிறது.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *