கோலாலம்பூர்,ஜூன்19: பாக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி இழந்ததிற்கு துன் மகாதீர்தான் பெரும் காரணம் என அரசியல் வட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் சூழலில் மீண்டும் துன் மகாதீரை பிரதமர் வேட்பாளராய் ஜசெக ஆதரித்திருப்பது பெரும் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.
தொடக்கத்திலிருந்து டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு ஆதரவாக இருந்த ஜசெக தற்போது துன் மகாதீர்க்கு ஆதரவு கொடுத்து டத்தோஸ்ரீ அன்வார்க்கு ஆப்பு வைத்து விட்டதாக அன்வாரின் ஆதரவாளர் மத்தியில் முனுமுனுக்கப்படுகிறது.
பதவிக்காகவும் ஆட்சி அதிகாரத்திற்காகவும் ஜசெக துன் மகாதீர் பக்கம் சாய்ந்து விட்டதாகவும் மக்கள் மத்தியில் பேசப்படும் நிலையில் இது அன்வார்க்கும் பாக்காத்தான் கூட்டணிக்கும் ஜசெக செய்யும் துரோகம் எனவும் கருதப்படுகிறது.
எப்பவுமே மக்களுக்காக போராடுகிறோம் என கூறி வந்த ஜசெக ஆட்சியில் அமர்ந்து சுகம் கண்ட பின்னர் மீண்டும் அதிகார பேராசையில் மகாதீர்க்கு ஆதரவு என ஜசெக அறிவித்திருப்பது அதன் ஆதரவாளர் மத்தியிலும் அதிர்ப்தியை உருவாக்கியுள்ளது.
ஜசெகவின் இச்செயலால் அக்கட்சிக்கும் கெஅடிலான் காட்சிக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் நம்பப்படுகிறது.
கெஅடிலான் கட்சியும் அமானா கட்சியும் அன்வார்க்கு ஆதரவு தேரிவித்திருக்கும் நிலையில் ஜசெக மட்டும் துன் மகாதீரை ஆதரித்திருப்பது அடுத்த பொதுத் தேர்தலில் இவர்களின் கூட்டணிக்கு ஆபத்து வருமோ என்னும் அச்சமும் தற்போது எழுந்துள்ளது.
தனது சுயநலனுக்காக மக்கள் வழங்கிய ஆட்சி அதிகாரத்தை இழக்க செய்த துன் மகாதீர் மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்டார்.அவரை மீண்டும் ஜசெக ஆதரிப்பது அக்கட்சியின் சுயநலம் என கருதப்படுகிறது.
நாட்டின் அடுத்த பொதுத் தேர்தல் இவ்வாண்டு நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் சூழலில் ஜசெகவின் இப்போக்கு பாக்காத்தான் ஹரப்பானின் வெற்றிக்கு பாதகமான சூழலை உருவாக்கலாம் என அரசியல் ஆர்வாலர்கள் கருத்துரைக்கிறார்கள்.
ஜசெக துன் மகாதீரை ஆதரித்து மக்கள் மத்தியில் அக்கட்சிக்கு இருக்கும் செல்வாக்கை இழந்து வருவதாக பரவலாக அக்கட்சியினர் கூட முனுமுனுக்க தொடங்கி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No Comment