உதவி நாடுவோரிடம் தொகுதி பார்ப்பதில்லை – மக்கள் சேவையே என் கடமை!!


புந்தோங்,ஜூன்17: உதவி கேட்டு என் அலுவலகம் கதவுகள் தட்டப்படும் போது வந்தவர் எந்த
சட்டமன்ற,நாடாளுமன்ற தொகுதியை சார்ந்தவர் என்னும் நிலையை தாம் ஒருபோதும்
பார்ப்பத்தில்லை என தெரிவித்த புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம்
மக்களுக்குச் சேவை செய்வதையே தமது கடமையாக கருதுவதாக கூறினார்.

குடும்ப சூழலியல் காரணமாக வேறு தொகுதியிலிருந்து இங்கு வந்து உதவி கேட்ட திருமதி.
வனிதா த/பெ கோவிந்தன் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் பிறந்த ஒரு
மாதமே ஆன குழந்தைக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கியதோடு
சிறுதொகையையும் வழங்கிய அவர் மக்களுக்கு உதவிட தனது சேவை மையம் எப்பவுமே
திறந்தே இருக்கும் என்றார்.

அதேவேளையில், தத்தம் தொகுதி மக்கள் உதவி என வரும் போது நாங்கள்
எதிர்கட்சி, எங்களுக்கு மானியம் இல்லையெனும் பழைய பல்லவியை மக்கள் பிரதிநிதிகள்
சொல்லாதீர்கள் என சாடினார்.நமக்கு கொடுக்கப்படும் அலவான்ஸ் என்பது மக்களுக்கு உதவி
செய்யவும் சேவை செய்யவும் தான் என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் கேட்டுக்
கொண்டார்.

முன்னதாக உதவி தேடி வந்த வனிதா ஈப்போ பாராட் நாடாளுமன்ற சேவை மையத்தையும்
கெப்பாயாங் சட்டமன்ற சேவை மையத்தையும் நாடி எந்தவொரு உதவியும் கிடைக்காத
நிலையில் புந்தோங் சட்டமன்ற சேவை மையத்தை நாடியதாக தெரிவிக்கப்பட்டது.
தாம் கேட்ட உதவிகளை அன்போடும் கருணை உள்ளத்தோடு வழங்கிய புந்தோங் சட்டமன்ற
உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியத்திற்கு நன்றி கூறிய வனிதா சொந்த தொகுதி மக்கள்
பிரதிநிதிகள் என்னை புறக்கணித்த நிலையில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினரின் இவ்வுதவி
காலத்தினால் செய்த பெரும் உதவி என்றார்.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *