தைப்பிங் ஆலயம் உடைப்பட்ட விவகாரத்தில் உண்மை தெரியாமல் உளறக்கூடாது – சிவசுப்பிரமணியம்!!


தைப்பிங்,ஜூன்17: தைப்பிங் அயோத்தி ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உடைப்பட்ட
விவகாரத்தில் உண்மை தெரியாமல் உளறக்கூடாது என புந்தோங் சட்டமன்ற
உறுப்பினரும் முன்னாள் இஸ்லாம் அல்லாதவர் விவகார பிரிவு ஆட்சிகுழு உறுப்பினரின்
சிறப்பு அதிகாரியுமான ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

சம்மதப்பட்ட அந்த ஆலயம் உடைப்பட்டத்திற்கு தானோ அல்லது ஆட்சிக்குழு உறுப்பினர்
போல் லியோங் அவர்களோ காரணியம் அல்ல.மாநில ஆட்சிக்குழு அலுவலகத்திலிருந்தோ
அல்லது மாநில நில அலுவலகத்திலிருந்தோ சம்மதப்பட்ட ஆலயத்தை உடைப்பதற்காக
நாங்கள் ஒருபோது எத்தகைய அறிக்கைகளையும் ஆலய நிர்வாகத்திற்கு கொடுக்கவில்லை
என்பதையும் தெளிவுப்படுத்துவதாக அவர் மேலும் கூறினார்.

ஆலய நிர்வாகம் எங்களை இது தொடர்பில் சந்தித்த போது மாநில நில அலுவலகம்
மட்டுமின்றி தைப்பிங் நில அலுவலகத்தையும் தொடர்புக் கொண்ட போது இது குறித்த எந்த
நோட்டிஸ்சும் வழங்கப்படவில்லை எனவும் தெரியவந்ததையும் சிவசுப்பிரமணியம்
நினைவுக்கூர்ந்தார்.

இந்த ஆலயத்தை உடைப்பதற்கான நோட்டிஸ் தேசிய சிறைச்சாலை தலைமை
இயக்குநரிடமிருந்து வந்ததாகும்.அந்த ஆலயத்தை அகற்றுவதற்கான அனுமதியை அவர்கள்
தேசிய நில அலுவலகத்திடமிருந்து பெற்றிருந்தனர் என்பது
குறிப்பிடத்தக்கது.மேலும்,சம்மதப்பட்ட ஆலயம் தைப்பிங் சிறைச்சாலையின் பாதுகாப்பு
பகுதியில் அமைந்திருந்ததோடு அதனை அங்கு பணியிலிருந்தவர்கள் தான் பராமரித்தும்
வந்தனர்.

இது தொடர்பில் சிவநேசன் கேள்வி எழுப்ப வேண்டுமென்றால் தேசிய சிறைச்சாலை
தலைமை இயக்குநர் மற்றும் தேசிய நில அலுவலக தலைமை இயக்குநரையும் தான் கேட்க
வேண்டுமே தவிர என்னையோ போல் லியோங்கையோ அல்ல என சுங்கை சட்டமன்ற
உறுப்பினர் சிவநேசனுக்கு நினைவுறுத்துவதாகாவும் அவர் தெரிவித்தார்.
நாங்கள் தற்போது ஜசெக-வை விட்டு வெளியேறி விட்டதால் தொட்டதெற்கெல்லாம்
எங்களை குறை சொல்லும் போக்கை கைவிட்டுவிட்டு மக்களுக்கு சேவை செய்வதில் கவனம்
செலுத்துங்கள் என்றும் சிவநேசனுக்கு அவர் நினைவுறுத்தினார்.

போல் லியோங் ஆட்சிக்குழுவில் இருந்த போது இம்மாநில கோவில்களுக்கு நிலப்பட்டா
முதற்கொண்டு ஆலயங்களின் தேவைகளுக்கும் அதன் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கு
நிறைவான சேவையை வழங்கியுள்ளோம்.அக்காலக்கட்டத்தில் எந்தவொரு ஆலயம்
உடைப்படவில்லை என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் குறிப்பிட்டார்.
அயோத்தி ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உடைப்பு;பேராக் முஸ்லிம் அல்லாதார் பிரிவின்
நிலைபாடுதான் என்ன? என்னும் தமிழ் நாளிதழ் ஒன்றில் வெளியான சிவநேசனின்
அறிக்கைக்கு ஆதி.சிவசுப்பிரமணியம் இவ்வாறு பதிலளித்தார்.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *