சிலாங்கூர் மாநில அரசு புக்கிட் பெருந்தோங் தோட்டத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்!


சிலாங்கூர் மாநில அரசு புக்கிட் பெருந்தோங் தோட்டத் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும்!

புக்கிட் பெருந்தோங் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டு வசதிக்கான நலத்தைக் கையகப்படுத்துங்கள்!!

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகள் கட்ட, புரோஸ்பெல் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடமிருந்து (PROSPELL ENTERPRISE SDN BHD)

சிலாங்கூர் மாநில அரசாங்கம் நிலத்தைப் பெற்றுதர வேண்டும்

என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க,

2019, ஆகஸ்ட் 1-ம் தேதி, காலை மணி 11-க்கு, ( 1 hb .Ogos,2019 , jam 11 pagi)

தொழிலாளர் குழு மாநில மந்திரி பெசார் அலுவலகம் செல்லவுள்ளது.

PEJABAT MENTERI BESAR SELANGOR , SUK , SHAH ALAM .

1999-ல் செய்யப்பட்ட வீட்டு ஒப்பந்தத்தின்படி, புக்கிட் பெருந்தோங் தோட்ட உரிமையாளரான புரோஸ்பெல் எண்டர்பிரைஸ் சென். பெர்(Prospell Enterprise Sdn Bhd. நிறுவனம் வீடுகள் கட்டிக்கொடுக்காததால், அத்தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்களான நாங்கள் இன்னும் பல துன்பங்களைச் சந்தித்து வருகிறோம்.

 

எங்கள் பிரச்சனைகள் சுருக்கமாக :-

1) தோட்ட உரிமையாளரின் துணை நிறுவனம் மூடப்படுகிறது என்று காரணம் கூறி, தொழிலாளர்களின் வீடமைப்புத் திட்டம் 2002-ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. ஆனால், ‘லாடாங் புரோஸ்பெல் எண்டர்பிரைஸ்’ நிறுவனம் இன்றும் இயங்கி கொண்டுதான் உள்ளது.

2) 24.11.2017 மாண்புமிகு கணபதி ராவ் –உடனான சந்திப்பின் போது, புரோஸ்பெல் எண்டர்பிரைஸ் நிறுவனம் வீடுகள் கட்டிக் கொடுக்க முடியாது என்று கூறிவிட்டது.

3) 13.03.2018 – மாண்புமிகு கணபதி ராவ்விடம், தொழிலாளர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க ஏற்ற நிலமாக கருதப்படும் லோட் 2099 நிலத்தின் மீது ‘கேவியட்’ பதிவு செய்து தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது. அது தொடர்பாக, 2018, செப்டம்பர் 18 மற்றும் 2019, ஜூன் 10-ம் தேதிகளில் கணபதி ராவ்விற்கு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

 

 

தோட்டத் தொழிலாளர்களுக்கான வீடுகள் கட்ட, புரோஸ்பெல் எண்டர்பிரைஸ் நிறுவனத்திடமிருந்து சிலாங்கூர் மாநில அரசாங்கம் நிலத்தைப் பெற்றுதர வேண்டும். அதுமட்டுமின்றி, வயதான, பெரும்பான்மையாக பி40 (B40) குழுவைச் சார்ந்த தோட்டத் தொழிலாளர்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்

என்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்க, 2019, ஆகஸ்ட் 1-ம் தேதி, காலை மணி 11-க்கு, தொழிலாளர் குழு மாநில மந்திரி பெசார் அலுவலகம் செல்லவுள்ளது.

 

 

டேசா பெருந்தோங் வீடு வாங்குவோர் நடவடிக்கை குழு & டேசா பெருந்தோங் தோட்டத் தொழிலாளர்கள்.

Telephone : 010 2580455 (Sivarajan PSM)

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *