இளம் தலைமுறையினரிடையே ஒருமைப்பாட்டை வலுபடுத்துவதிலும் தலைமையேற்பதிலும் ஓரடி முன்னேறியிருக்கும் மலேசிய பாஸ் இளைஞர் பேரவை (DPPM)


இளம் தலைமுறையினரிடையே ஒருமைப்பாட்டை வலுபடுத்துவதிலும் தலைமையேற்பதிலும் ஓரடி முன்னேறியிருக்கும் மலேசிய பாஸ் இளைஞர் பேரவை (DPPM)

  இன்று காலை நடைபெற்ற ம.இ.கா. தேசிய மகளிர், இளைஞர், புத்ரா, புத்ரி மாநாட்டுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று மலேசிய பாஸ் இளைஞர் பேரவையின் உயர் தலைவர்களுடன் சென்றேன். என்னுடன் பாஸ் ஆதரவு பேரணி மன்ற இளைஞர் தலைவர் சகோதரர் பாலேந்திரனும் வந்திருந்தார். அந்த அழைப்பை விடுத்த ம.இ.கா. இளைஞர் பிரிவுக்குக் கோடிக்கணக்கான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
  இதற்கு முன் நான் வலியுறுத்தியது போல, இளைய தலைமுறையினரின் குரலும் கருத்தும் ஓங்கி ஒலிப்பதை உறுதிசெய்ய இளைஞர்கள் தலைமைத்துவம் ஒன்றுபட்டிருப்பதை உறுதிசெய்வதற்கான முழு முயற்சியை மேற்கொள்ளும் கடப்பாட்டை மலேசிய பாஸ் இளைஞர் பேரவை கொண்டிருக்கிறது. இதற்கு முன், ம.சீ.ச. இளைஞர் பிரிவு தலைவர் திருமதி நிக்கோல்லை டிபிபிஎம் சந்தித்த வேளை, இளைஞர் & விளையாட்டு அமைச்சரும், பெர்சத்து இளைஞர் பிரிவு தலைவர் மாண்புமிகு சைட் சடிக் சைட் அப்துல் ரஹ்மானை நாளை சந்திக்கவிருக்கிறது. இளைஞர்களுக்கு இடையிலான ஒற்றுமை தொடர நல்வாழ்வு கூட்டணியில் இருக்கும் எல்லா இளைஞர் பிரிவுகளையும் டிபிபிஎம் சந்திக்கும்.
  பக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் கீழ் மலேசிய இளைஞர்களின் நலன் காக்கப்படாததை உணர்ந்து நெருக்கடியில் இருக்கும் அவர்களின் நடப்பு நிலையில் இருந்து மீட்கும் திட்டத்தை டிபிபிஎம் அதன் முதன்மை குறிக்கோளாக கொண்டிருக்கிறது. டிபிபிஎம்-இன் கீழ் இளைஞர் ஒருமைப்பாடு, இளம் தலைமுறையினரின் அரசியல் தலைமைத்துவத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை, மாறாக இளைஞர் தலைவர்கள், அரசு சார்பற்ற அமைப்புகள், மன்றங்கள், இன, சமயம், அரசியல் என பல்வேறு பின்புலத்தைக் கொண்ட இளைஞர் குழுக்கள்,  ஆகியோரையும் அது உட்படுத்தியிருக்கிறது. மலேசிய இளைஞர்களின் குரலை ஓங்கி ஒலிக்கச் செய்யவும் முக்கிய விவகாரங்களுக்குப் போராடவும் அது வாய்ப்பு வழங்கும்.
  நாட்டின் இளம் தலைமுறையினரின் நல்வாழ்வை உறுதிசெய்யும் இலக்கை நோக்கி மலேசிய இளைஞர்களுக்குப் புது அரசியல் அடித்தளத்தை ஏற்படுத்துவதில், அந்த மாநாட்டில் டிபிபிஎம்-இன் பங்கேற்பு வரலாற்றுப்பூர்வமானதாக விளங்குகிறது. அதேவேளையில், பாஸ்-இன் முதன்மை போராட்டமான முதிர்ச்சியான, நல்வாழ்வளிக்கும் அரசியல் பண்பாட்டுக்கு ஈடாகவும் அது திகழ்கிறது.
#BPMS
#DemiIslam
#IslamMemimpinPerpaduan
Ir. ஹஜ்.கைரில் கிருதீன்
இளைஞர் தலைவர்
மலேசிய பாஸ் இளைஞர் பேரவை

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *