பனோப்டன் தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா
பீடோர்,23ஜன: பள்ளி மாணவர்களிடையே நமது பண்பாட்டையும் பாரம்பரியத்தைங்கல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பள்ளியின் தலைமையாசிரியர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களுக்கு பொங்கல் குறித்த தகவல்களும் தெளிவும் நனி சிறப்போடு எடுத்துரைக்கவும் பட்டது.
பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் பாரம்பரிய உடையணிந்து பள்ளியில் பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.பொங்கல் மட்டுமின்றி நமது அனைத்து விழாக்களும் பண்பாடுகளும் மாணவர்கள் மனங்களில் ஆழமாய் பதிய தொடர் நடவடிக்கைகளும் முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என தலைமையாசிரியர் சரவணன் கூறினார்.
மிகவும் சிறப்பாக பள்ளி அளவில் கொண்டாடிய மகிழ்ந்த பொங்கல் விழாவிற்கு நல்லுள்ளம் கொண்ட திரு.கெங்கையா யும் ஊக்குவிக்கும் வகையில் பனோப்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் பொமாணவர்களுக்கான மதிய உணவை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற அனைத்து நிலையிலும் ஒத்துழைப்பும் உதவியும் வழங்கிய அனைவருக்கும் சரவணன் பள்ளியின் சார்பில் தனது நன்றியினை பதிவு செய்துக் கொண்டார்.
No Comment