தாப்பா ரோட் கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா
தாப்பா,ஜன23:பள்ளிகளில் கொண்டாடப்படும் நமது பண்பாட்டு நிகழ்வுகள் மாணவர்கள் மத்தியில் ஆழமாய் பதிந்து அஃது அவர்களின் வாழ்வியல் சான்றாக தொடர்ந்து மெய்பிப்பதாக தாப்பா ரோட் கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.தியாரன் தெரிவித்தார்.
நமது பண்பாடும் பாரம்பரியமும் அது சார்ந்த கலையும் மாணவர் பருவத்திலேயே விதைக்கப்பட்டால்தான் அஃது தலைமுறைகள் தாண்டியும் உயிர்ப்பிக்கும் என அவர் மேலும் கூறினார்.
பள்ளி அளவில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வில் அவ்வாறு கருத்துரைத்த அவர் இனி வருங்காலங்களில் நமது பண்பாடு,பாரம்பரியம்,கலை உட்பட சமயம் சார்ந்த நிகழ்வுகளும் பள்ளியின் கற்றல் கற்பித்தலோடு சிறந்த முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
நடைபெற்ற பொங்கல் விழாவில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.மகாலிங்கம்,பள்ளியின் மேலாளர் வாரியத்தின் துணைத்தலைவர் திரு.சத்தியசீலன்,பள்ளியின் சமய ஆசிரியர்களான திருமதி,வள்ளியம்மை மற்றும் திருமதி.நல்லாம்மா ஆகியோருடன் பெற்றோர்களும் கலந்துக் கொண்டனர்.
ஆசிரியர்களும் மாணவர்களும் பண்பாட்டு உடையில் பொங்கல் வைத்து மகிழ்ந்த வேளையில் அனைத்து நிலையிலும் உதவியும் ஒத்துழைப்பும் நல்கிய நல்லுள்ளங்களுக்கு தலைமையாசிரியர் நன்றியினை பதிவு செய்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No Comment