ஆட்கடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுப்போம் !!


ஆட்கடத்தலுக்கு எதிராகக் குரல் கொடுப்போம் !

– ஆதவன் –

#EndHumanTrafficking

“ Responding to the trafficking of children and young people ”

உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு நாள்
30 – 07 – 2018

மனிதர்களைச் சுரண்டும் நோக்கத்திற்காக சக்தியையும், பலாத்காரத்தையும், மோசடியையும், வஞ்சகத்தையும் அல்லது வேறு வழிவகைகளையும் பயன்படுத்துவதன் மூலம், ஒருவரை சேர்த்துக் கொள்கின்ற, ஏற்றி இறக்குகின்ற, இடமாற்றுகின்ற, அடைக்கலம் வழங்குகின்ற அல்லது வரவேற்கின்ற செயற்பாடொன்றை மனித ஆட்கடத்தல் சம்பந்தப்படுத்துகின்றது.
குறிப்பாக பெண்களையும் சிறார்களாஇயும் அதிகமாகத் தொடர்புப்படுத்தும் இந்த குற்றச்செயலைக் களையவும் இதற்கு எதிரான விழிப்புணர்ப்வை ஏற்படுத்தவும் ஐக்கிய நாடுகள் ஒன்றியம் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதம் 30ஆம் நாள் உலக ஆட்கடத்தல் எதிர்ப்பு நாளாக அங்கீகரித்து பல செயல்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாண்டு சிறார்கள், இளையோர்கள் ஆட்கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் கருத்தின் அடிப்படையில் தங்கள் கவனத்தை ஐக்கிய நாடுகள் ஒன்றியம் திருப்பியுள்ளது.

“பெருமளவு உயிர்களில் மறைந்துள்ள இரகசியமே பெண்களுக்கு எதிரான வன்முறையாகும். ஏதாவது சமுகத்தின் சேமநலனுக்கு பெண்களுக்கெதிரான வன்முறையில் நிலவும்போது அது கெடுதலாக விளங்குவதனால் ஏனையவற்றுக்கும் மத்தியில் இலக்கியத்தின் வழியாகவும், விழிப்புணர்வுத் திட்டங்களில் வழியாகவும், இணையத்தின் ஊடாகவும்ப் பெண்களும் ஆண்களும் அறிவூட்டப்படுவது அவசியமாகும். சட்டங்களால் அன்றி ஆனால் அதன் மறைமுகத்தன்மையினாலும், அதை சமூகம் ஏற்றுக்கொண்டதனாலும் ஒரு நாட்டின் மக்கள் தொகையில் பாதியை நோக்கி வன்முறை கவனிக்காமல் விடுப்பட்டுள்ளதாலும் சட்டப்பூர்வமாக்கப்பட்டுள்ளதாலும் அந்நாடு நாகரீகமடைந்ததாக இருக்கும்”

– அமீன ஹுசெயின்

உள்நாட்டிலேயே சிறுவர்களை உட்படுத்துகின்ற பாலியல் உல்லாசப்பயணம் உட்பட உடலுழைப்புக்கும், வர்த்தகப் பாலியல் சுரண்டலுக்கும் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர்களும் கடத்தப்படுகின்றார்கள் என போதைப்பொருள்களினதும், குற்றத்தினதும் மீதான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் [(United Nations Office on Drugs and Crime) (UNODC)] தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையொன்று குறிப்பிடுகின்றது. வீட்டு வேலைக்காகவும், கட்டுமாணத் தொழிலுக்காகவும் தொழிற்சாலைத் தொழிலுக்காகவும் மத்திய கிழக்குக்கும், சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் வேறு நாடுகளுக்கும் தொழிலுக்காக ஆட்கடத்தல் நடக்கின்றது. ஆங்கிலத்தில 3D (Dஇர்ட்ய், Dஅஙெரொஉச் அன்ட் Dஎமெஅனிங்) தொழில்கள் எனக் கூறப்படுகின்ற அழுக்கடைந்த, அபாயகரமான, இழிவான தொழில்களுக்கான மலிவான உடலுழைப்புக்கான தேவை அதிகரிப்பால் பல நாடுகளில் ஆட்கடத்தல் நிலைமை மோசமடைந்துள்ளது.

மூலம்: http://www.unodc.org/unodc/en/human-trafficking/2011/legal-and-policy-review—responses-to-human-trafficking-in-bangladesh-india-nepal-and-sri-lanka.html

கடத்துவதைத் தடுப்பதற்கும், அடக்குவதற்கும் அத்துடன் தண்டிப்பதற்குமான ஐக்கிய நாடுகளின் மேலதிக விதிகளின் உறுப்புரை 3(அ) ஆட்கடத்தலை பின்வருமாறு வரையறுக்கின்றது:

பயமுறுத்தலால், வன்முறையால் அதன் மூலம் நடத்தப்படும் ஆட்கடத்தலின், மோசடியின், வஞ்சித்தலின், அதிகாரத்தைத் தவறான முறையில் பயன்படுத்துவதாலும் அல்லது ஊறுபடுந்தன்மையின் நிலையொன்றின் அல்லது சுரண்டல் நோக்கத்திற்கு இன்னொரு நபருக்கு மேலாக கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கும் ஒருவரின் இணக்கத்தைச் சாதிப்பதற்கு கொடுப்பனவுகளை அல்லது நன்மைகளை வழங்குவதன் அல்லது பெறுதலின் வேறு வடிவங்களினால் ஆட்களைச் சேர்த்துக்கொள்ளுதல், ஏற்றி இறக்குதல், இடமாற்றுதல், தஞ்சமளித்தல் அல்லது பெறுதல். ஏனையோரின் சுரண்டல் அல்லது பாலியல் தொழில் அல்லது பாலியல் சுரண்டலின் வேறு வடிவங்கள், கட்டாயப்படுத்தப்பட்ட உடலுழைப்பு அல்லது சேவைகள், அடிமைத்தனம் அல்லது அடிமைத்தனத்திற்கு ஒத்த வழக்கங்கள், மட்டற்ற கீழ்ப்படிவு அல்லது பிறப்புறுப்புக்களை அகற்றுதல் ஆகியவற்றை குறைந்தபட்சமாக சுரண்டல் என உள்ளடக்கப்படுகின்றது.

ஆட்கடத்தல் வகைகள்

பாலியல் ஆட்கடத்தல்: வர்த்தகப் பாலியல் தொழிலுக்கான நோக்கத்திற்காக மனித ஆட்கடத்தலே பாலியல் ஆட்கடத்தலாகும். இது விபச்சாரத்திற்கான மனித ஆட்கடத்தல் எனக் கூறும் இன்னொரு வழியாகும்.

உடலுழைப்புக்காக ஆட்கடத்தல்: பாலியல் சாராத வேலைக்கு யாரேனும் ஒருவர் கடத்தப்படுவதே உடல் உழைப்புக்காக ஆட்கடத்தலாகும். ஆண்கள், பெண்கள், அல்லது சிறுவர்கள் பண்ணை வேலைக்காக அல்லது வீட்டு வேலைக்காக கடத்தப்படுவது எடுத்துக்காட்டுகளில் சில.

உறுப்பைக் கடத்துதல்: இது ஆட்களைக் கடத்தும்போது இடம்பெறுகின்றது, இதனால் மாற்று உறுப்புகளைப் பயன்படுத்துவதற்காக அவர்களது உறுப்புகள் விற்கப்படுகின்றன. இது தன்னிச்சையிலானது என்ற போதும் கூட ஆட்கடத்தலேயாகும். எனவே, வறிய நபர் ஒருவர் தனது சிறுநீரகம் ஒன்றை விற்றால், அவர் உறுப்பு கடத்தல் குற்றவாளி எனக் கருதப்படுகிறார்.

பாலியல் தொழில் vs ஆட்கடத்தல்

ஆட்கடத்தலுக்கு நிர்ப்பந்திக்கப்பட்ட பாலியல் தொழில் தொடர்பானதாகும். ஆனால், அது ஒரே மாதிரியான குற்றம் என்று அவசியமில்லை. ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் அனேகமாக கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது மோசடி செய்யப்பட்டு வர்த்தகப் பாலியல் தொழிலின் அங்கமாக விளங்குகின்றனர்.

பெண்களையும், சிறுவர்களையும் சுரண்டும் பெருமளவு வடிவங்களில் கட்டாயப்படுத்தப்பட்ட பாலியல் தொழிலும் ஒன்றாகும். பெண்களைக் கடத்துதல் அல்லது பாலியல் வர்த்தகத்தில் பெண்களின் அடிமைத்தனம் ஆகியன பற்றி நாம் பேசும் போது, தன்னிச்சை சாராத மட்டற்ற கீழ்ப்படிவு, கடன்சார்ந்த அடிமைத்தனம், பணியாட்களை வேலைக்கமர்த்தல் அல்லது அடிமைத்தனம் ஆகிய நோக்கங்களுக்காக கட்டாயப்படுத்தலின் அல்லது மோசடியின் ஊடாக “உடலுழைப்புக்காக அல்லது சேவைகளுக்காக” மனிதர்களின் விற்பனையை, மனிதர்களை ஏற்றி இறக்குவதை இதற்குள் நாம் சேர்த்துக்கொள்கின்றோம்

ஆட்கடத்தல் வட்டத்தில் சம்பந்தப்பட்டுள்ள மக்கள்

ஆட்களை ஏற்றிஇறக்கல், உல்லாசப்பயணம், ஊடகம்/தொடர்பாடல், பொழுதுபோக்கு ஆகியன உட்பட, பலதரப்பட்ட தனிப்பட்டவர்களையும், நிறுவனங்களையும் ஆட்கடத்தல் தொடர்பான வலைப்பின்னல்களில் சம்பந்தப்படுத்த முடியும். எடுத்துக்காட்டாக, ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு மக்களை நகர்த்தும் வாடகை வண்டி ஓட்டுநர்கள், வகைப்படுத்தப்பட்ட செய்திப்பத்திரிகை, வானொலி விளம்பரங்கள், இணையத்தளம் ஆகியன ஊடாக ஆட்சேர்ப்பின் முறையொன்றாகப் பயன்படுத்தப்படுகின்ற ஊடகம்.பாதுகாப்பு இல்லங்களாகப் பயன்படுத்தப்படுகின்ற விடுதிகளும், சாலையோர உணவு விடுதிகளும்.போலியான ஆவணங்களை வழங்கும் மோசடிக்காரர்கள் ஆகியோர் இந்த ஆட்கடத்தலின் ஊடகமாக இருந்து செயல்படுகின்றனர்.

ஆட்கடத்தலுக்கு உட்படுத்தப்படுவோர் எதிர்நோக்கும் தீய விளைவுகள்

ஊதியச் சிக்கல்கள்
ஆபத்தான வேலை செய்யும் சூழல்
கொடூரமான உடல் அளாவிலான அத்துமீறல்கள் / கொடுமைகள்
போதைப்பொருள், அடிமைத்தனம் ஆகியனவற்றுக்கு கட்டாயப்படுத்தி உட்படுத்துதல்
மருத்துவ கவனிப்பு இல்லை
உளாவியல் பிரச்சனைகள்
சமூகத்தால் ஒதுக்கப்படுதுதல்
தேவையற்றாக் கர்ப்பம்
பாதுக்காப்பற்ற சருச்சிதைவுகள்
தாய்க்குரிய மரண ஆபத்து
மலட்டுத்தன்மை
கர்ப்பப்பை புற்றுநோய்
HIV / AIDS – வேறு பாலியல் அடிப்படையிலான நோய்கள் பரவும் நிலை (STDs)
உடல் காயம்

ஆட்கடத்தலைத் தடைசெய்யும் சர்வதேசச் சட்டங்கள்

உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் (1948).
இது அடிமைத்தனம், மட்டற்ற கீழ்ப்படிவு, அடிமை வர்த்தகம் அத்துடன் சித்திரவதை அல்லது கொடூரமாக, மிருகத்தனமாக அல்லது தரக்குறைவாகக் கருதுதல் அல்லது தண்டித்தல் ஆகியனவற்றைத் தடைசெய்கின்றது.

http://www.un.org/en/documents/udhr/index.shtml

மனிதர்களின் ஆட்கடத்தலின் அடக்குமுறையும் ஏனையோரின் பாலியல் தொழிலின் சுரண்டலும் ஐ.நா. ஒன்றியம் (1949)
இது பெண்களில் ஆட்கடத்தலுக்கும், பாலியல் தொழிலின் சுரண்டலுக்கும் சகல வடிவங்களுக்கு எதிரான பலதரப்பட்ட நடவடிக்கைகளை வழங்குகின்றது.

http://www.unhcr.org/refworld/docid/3ae6b38e23.html

பெண்களுக்கு எதிரான எல்லா விதமான பாரபட்சங்களை இல்லாதொழித்தல் தொடர்பான ஒன்றியம் (1979) உறுப்புரை 6.
திட்டவட்டமாக பெண்களின் ஆட்கடத்தலைக் கையாளும் ஏற்பாடொன்றை உள்ளடக்குவதுடன், பெண்களில் ஆட்கடத்தலுக்கும், பெண்களின் பாலியல் தொழிலுக்கான சுரண்டலுக்கும் அதற்கான எல்லா வடிவங்களையும் அடக்குவதற்கான சட்டம் இயற்றலும் உட்பட எல்லா பொருத்தமான நடவடிக்கைகளையும் எடுப்பதற்காக அனைத்து ஏற்றுக்கொள்ளும் நாடுகளை வேண்டுகின்றது.

http://www.un.org/womenwatch/daw/cedaw/text/econvention.htm

சிறுவரின் உரிமைகள் மீதான ஐக்கிய நாடுகள் ஒன்றியம் (1989).
இது ஏதாவது நோக்கத்திற்காக அல்லது ஏதாவது வடிவத்தில் சிறுவர்களைக் கடத்துவதையும், விற்பனை செய்வதையும் அல்லது வாத்தகம் செய்வதையும் தடுப்பதற்காக பாலியல் சுரண்டல், பாலியல் அத்துமீறல், ஏனைய வடிவங்களிலிருந்து சிறுவரைப் பாதுகாப்பதற்காக எல்லா உறுதிப்படுத்தும் நாடுகளைக் கோருகின்றது.
http://www.unhcr.org/cgi-bin/texis/vtx/refworld/rwmain?docid=3ae6b38f0&page=search

பாலியல் தொழிலுக்கு பெண்களும், சிறுவர்களும் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கும், எதிர்த்து போராடுவதற்குமான ஸாஆற்C அமைப்பு, 2002:
பெண்களும், சிறுவர்களும் கடத்தப்படுவதைத் தடுத்தல், தடைசெய்தல் மற்றும் அடக்குதல் அத்துடன் ஆட்கடத்தலினால் பாதிக்கப்பட்டவர்களைத் தாய்நாட்டுக்கு அனுப்புதல், புனர்வாழ்வளித்தல் அத்துடன் குறிப்பாக மூலத்தையும், இடைத்தங்கலையும், செல்லுமிடத்தையும் கொண்ட நாடுகளாக விளங்கும் ஸாஆற்C உறுப்பு நாடுகளில் சர்வதேச விபச்சார வலைப்பின்னல்களில் பெண்களும், சிறுவர்களும் பயன்படுத்தப்படுவதைத் தடுத்தல் என பலதரப்பட்ட அம்சங்களைப் பயனுறுதி வாய்ந்ததாக கையாள்வதற்கு உறுப்பு நாடுகள் மத்தியில் ஒத்துழைப்பினை மேம்படுத்துவதே இந்த சமவாயத்தின் நோக்கமாகும்.

http://www.humantrafficking.org/publications/424

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *