இடைநிலைப்பள்ளிகளில் கொண்டாடப்படும் பண்பாட்டு விழாக்களால் நமது பண்பாடும் அது சார்ந்த கலை


தாப்பா,பிப்09: இடைநிலைப்பள்ளிகளில் கொண்டாடப்படும் பண்பாட்டு விழாக்களால் நமது பண்பாடும் அது சார்ந்த கலை,பாரம்பரியத்தோடு நம்மினத்தின் அடையாளமும் உயிர்கொள்வதாக தாப்பா தொகுதி ம இ கா தலைவர் டத்தோ டாக்டர் மு.மாலசிங்கம் பெருமிதமாக கூறினார்.

ஒவ்வொரு இடைநிலைப்பள்ளியிலும் பொங்கல் உட்பட நமது பண்பாட்டு நிகழ்வுகளோடு மொழி இனம் சார்ந்த நிகழ்வுகளையும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

தாப்பா அமிட் காஃன் இடைநிலைப்பள்ளியில் தமிழ்மொழி கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பொங்கல் விழாவினை நிறைவு செய்து வைக்கையில் அவர் இதனை கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளில் கற்றல் கற்பித்தலோடு நமது பண்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதை போல் ஒவ்வொரு இடைநிலைப்பள்ளியிலும் கற்றல் கற்பித்தலோடு நமது பண்பாடுகளையும் முன்னெடுக்க பள்ளியின் தமிழ்மொழி கழகமும் தமிழ் ஆசிரியர்களும் பெரும் பங்காற்ற வேண்டும் என்றார்.

இதற்கு முன்னதாக இந்நிகழ்வினை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து பேசிய கவுன்சிலரும் இப்பள்ளியின் முன்னாள் மாணவருமான மு.சந்தனசாமி பல ஆண்டுகள் கடந்து இப்பள்ளியில் பொங்கல் விழாவினை முன்னெடுத்திருப்பது மகிழ்ச்சியாக இருப்பதோடு அதனை முன்னெடுத்த ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் இவ்வேளையில் நன்றியினை பதிவு செய்துக் கொள்கிறேன்.

தமிழ் மணக்கும் தாப்பாவில் தமிழ்ப்பள்ளிகளில் மட்டுமின்றி ஒவ்வொரு இடைநிலைப்பள்ளியிலும் நம்மினத்தின் பெருமை சொல்லும் பண்பாட்டு விழாவையும் அத்தோடு நமது பாரம்பரியத்தையும் நாகரிகத்தையும் மாணவர்களிடையே கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை என்றும் கூறினார்.

இப்பள்ளியில் தாம் தலைமையேற்று முதன்முறையாக நடைபெறும் பொங்கல் விழாவினை காண்கையில் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுத்த பள்ளியின் முதல்வர் யாங் மூலியா ராஜா மன்சோர் பின் ராஜா டாவூட் ஒவ்வொரு இனத்தின் பண்பாட்டையும் அவர்கள் சார்ந்த விடயங்களையும் பிற இன மாணவர்களும் அறிந்துக் கொள்ளும் வகையில் பல்லின மாணவர்களும் பங்கெடுப்பது இதுபோன்ற நிகழ்வுகளுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் என்றார்.

நீண்ட வருடங்களுக்கு பின்னர் இதுபோன்ற நிகழ்வினை முன்னெடுத்திருக்கும் இப்பள்ளிக்கு அன்மையில் மாற்றலாகிய தமிழாசிரியர் அஞ்சலிக்கும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து இப்பொங்கல் விழா சிறப்படைய வழிவகுத்த மாணவர்களுக்கும் தமிழ்மொழி கழகத்திற்கும் அவர் தனது வாழ்த்தினையும் நன்றியினையும் தெரிவித்தார்.

நடைபெற்ற பொங்கல் விழாவில் பொங்கல் வைத்தலோடு,கோலம் போடுதல்,உறி அடித்தல் உட்பட மாணவர் படைப்புகளும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *