எப்.ஏ.எம் எல்.எல்.பி ஏற்பாட்டில் கால்பந்துத்துறை வளர்ச்சிக் கருத்தரங்கு 2017!
எப்.ஏ.எம் இன் துணைத்தலைவர் தலைமை!
எதிர்கால கால்பந்துத்துறையை மேம்படுத்த திட்டங்கள்
ஜொகூர்பாரு -மலேசிய நாட்டின் கால்பந்து வளர்ச்சியை முன்னெடுக்க எப்.ஏ.எம் இன் தலைவர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் பல்வேறான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி வருகிறார். அதனையடுத்து எப்.ஏ.எம் எல்.எல்.பி இன் ஏற்பாட்டில் கால்பந்துத்துறை சார்ந்த கருத்தரங்கு கூட்டம் நேற்று பாரஸ்ட் சிட்டி (FOREST CITY) போனிக்ஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்திற்கு எப்.ஏ.எம் இன் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் தலைமை தாங்கினார்.முதலாம் ஆண்டு நடைபெற்ற இந்த கருத்தரங்கில் நாட்டின் முன்னணி கால்பந்து சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். நமது சமுதாயத்தை பிரதிநிதிக்கும் மிஃபாவின் தலைவர் டத்தோ டி.மோகன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
நாட்டின் எதிர்கால கால்பந்துத் துறையை மேம்படுத்தும் வண்ணம் இந்தக் கூட்டத்தில் கருத்து பரிமாற்றம் செய்யப்பட்டது.
இந்தக்கருத்தரங்கில் கலந்து கொண்ட டத்தோ டி.மோகன் அவர்களிடம் இது குறித்து வினவிய போது எப்.ஏ.எம் இன் தலைவர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் தலைமையில் புதிய மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை உள்ளது. கால்பந்துத்துறை சார்ந்து தரமான விளையாட்டாளர்களை உருவாக்க இளம் வயதில் இருந்தே அவர்களுக்கான வாய்ப்பையும், களத்தையும் உருவாக்க வேண்டும் என்றார்.
எப்.ஏ.எம் எல்.எல்.பி ஏற்பாட்டில் கால்பந்துத்துறை வளர்ச்சிக் கருத்தரங்கு 2017!

No Comment