தனித்துவ சேவையாலும் ஆற்றல் மிக்க செயல்பாட்டாலும் பினாங்கு மாநில ம இ காவின் அடையாளமாய் ஜெ.தினகரன் விளங்குகிறார்


தனித்துவ சேவையாலும் ஆற்றல் மிக்க செயல்பாட்டாலும் பினாங்கு மாநில ம இ காவின் அடையாளமாய் ஜெ.தினகரன் விளங்குகிறார்

   பினாங்கு – கடந்த 2008ஆம் ஆண்டில் பினாங்கில் தனது அரசியல் அடையாளத்தை தொலைத்து விட்ட ம இ கா தற்போது மீண்டும் அம்மாநிலத்தில் மக்கள் மத்தியில் குறிப்பாக இந்தியர்கள் மத்தியில் தனித்துவமான நம்பிக்கையை பெற்று வருவதை நன்கு உணர  முடிகிறது.பினாங்கு வாழ் இந்தியர்களின் நம்பிக்கை மீண்டும் ம இ கா பக்கம் திரும்பிக்கொண்டிருப்பதை மறுத்திட முடியாது என்றும் அரசியல் வட்டத்தில் முனுமுனுக்கப்படுகிறது.

   மீண்டும் இந்திய சமுதாயத்தின் நம்பிக்கையும் ஆதரவும் ம இ கா மீது திரும்பிட ஜெ.தினகரன் எனும் ம இ காவின் துருப்புச் சீட்டு பெரும் காரணியமாய் விளங்குகிறது.தனது நன் சேவையாலும் ஆற்றல் மிக்க செயல்பாட்டாலும் நடப்பியல் சூழலில் பினாங்கு மாநில ம இ காவின் அடையாளமாகவும் பொக்கிசமாகவும் கட்சியின் மத்திய செயலவை உறுப்பினருமான ஜெ.தினகரன் விளங்குகிறார்.

  பினாங்கு வாழ் இந்தியர்களின் பல்வேறு பிரச்னைகளுக்கு துணிந்துக் குரல் கொடுப்பதோடு அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவும் கொடுத்து வரும் தினகரன் பினாங்கில் இந்தியர்கள் மத்தியில் செல்வாக்கும் நம்பிக்கையும் பெற்ற அரசியல் ஆளுமையாய் வளர்ந்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பினாங்கு மாநில ம இ காவின் தனித்துவ அடையாளமாய் விளங்கிடும் தினகரன் நாட்டின் 14வது பொது தேர்தலில் நடப்பு அரசாங்கத்திற்கு பெரும் சவாலாக இருப்பார் என்றும் கருதப்படுகிறது.

   குறிப்பாக நடப்பு அரசாங்கத்தில் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் செயல்பாடுகளை துணிந்து விமர்சனம் செய்வதோடு புறக்கணிக்கப்படும் இந்திய சமுதாயத்தின் கோரிக்கைகளுக்கும் தேவைகளுக்கும் துணிந்து குரல் கொடுப்பதோடு விவேகமான போராட்டத்தையும் முன்னெடுக்கும் தினகரன் ஜசெக கட்சியின் இந்திய மக்கள் பிரதிநிதிகளுக்கும் பெரும் மருட்டலாக விளங்குகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    பினாங்கு மாநிலத்தில் ம இ கா என்றால் அஃது தினகரன் தான் எனும் நிலைக்கு அவரது செயல்பாடும் ஆற்றலும் மக்கள் மத்தியில் நன்கு ஆழப்பதிவாகி விட்டது.இந்திய சமுதாயத்திற்கு துணிந்து குரல் கொடுக்கும் அரசியல் அடையாளமாய் பினாங்கு வாழ் இந்தியர்கள் மத்தியில் ஆழமரமாய் வளர்ந்துக் கொண்டிருக்கும் தினகரன் நடப்பு அரசாங்கத்திற்கும் மாநில ஹராப்பான் கூட்டணியினருக்கும் பெரும் சவாலாக இருக்கிறார் என்பதை கண்கூடாய் காண முடிகிறது.

   பினாங்கு மாநிலத்தில் நாட்டின் 14வது பொது தேர்தலில் தினகரனின் ஆற்றலாலும் அவரது விவேகமான செயல்பாட்டாலும் ம இ கா மீண்டும் இழந்த தொகுதிகளில் சிலவற்றை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அஃது ஜசெகவினர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருப்பதையும் அறிய முடிகிறது.பினாங்கில் இந்திய இளைஞர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு விளையாட்டுத்துறையிலும் தனித்துவ கவனம் செலுத்திடும் தினகரன் இந்திய சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் பல்வேறு ஆக்கப்பூர்வ செயல் திட்டங்களோடு தொடர்ந்து அவர் களமிறங்கி வருகிறார்.

   நாட்டின் 14வது பொது தேர்தல் ம இ காவின் குறிப்பாக டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியத்தின் தலைமையிலான முதல் தேர்தல் எனும் ரீதியில் கடந்த இரு பொது தேர்தல்களில் இழந்த தொகுதிகளை மீட்பதில் பெரும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் பினாங்கு மாநிலத்தில் இழந்த தொகுதிகளை மீட்க தினகரன் எனும் மந்திரக்கோள் தேர்தல் களத்து போர் வீரனாய் செயல்படுவார் என்பது ம இ காவினர் மத்தியில் முனுமுனுக்கப்படும் தாரக மந்திரமாய் உள்ளது.அவரது ஒவ்வொரு செயல்பாடும் முன்நகர்வும் பினாங்கு வாழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பையும் மதிப்பையும் பெற்றுள்ளதை மறுத்திட முடியாது.

   கட்சியின் தேசிய தலைவர் உட்பட உயர்மட்ட தலைவர்கள் மற்றும் சாமானிய மக்கள் வரை பெரும் ஆதரவையும் நம்பிக்கையையும் பெற்றிருக்கும் தினகரன் நாட்டின் 14வது பொது தேர்தலில் பினாங்கு மாநிலத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி அம்மாநிலத்தில் மீண்டும் ம இ காவின் செல்வாக்கை வானுய செய்வார் என்பது பினாங்கு மாநில ம இ காவினரின் பெரும் நம்பிக்கையாக இருக்கும் வேளையில் தினகரனால் இந்திய சமுதாயம் சிறந்த இலக்கை அடையும் எனவும் பினாங்கு வாழ் இந்தியர்களும் பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *