வெடிகுண்டு பசங்க (உருமி மேளம்) படத்தின் கோலாகல பூஜை! விரைவில் படப்பிடிப்பு!


வெடிகுண்டு பசங்க (உருமி மேளம்)  படத்தின் கோலாகல பூஜை! விரைவில் படப்பிடிப்பு!

பூச்சோங் மார்ச் 17 – உள்ளூர் கலைஞர் டெனிஸ் அவர்களின் சொந்த நிறுவனமான வீடு தயாரிப்பில் உருவாகவிருக்கும் வெடிகுண்டு பசங்க (உருமி மேளம்) திரைப்படத்தின் பூஜை பூச்சோங் பெருமாள் ஆலயத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த படப் பூஜையில் மஇகாவின் உதவித்தலைவர் டத்தோ டி.மோகன், வெளியுறவுத்துறை முன்னாள்  துணையமைச்சர்  டத்தோ கோகிலன் பிள்ளை, மஇகா தேசிய இளைஞர் பிரிவுத்தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.  உள்ளூர் படைப்புகள் முன்பை விட எல்லா வகையிலும் வளர்ச்சி அடைந்துள்ளது. அந்த வகையில்  நமது கலைஞர்களுக்கு ஆதரவளிக்க வேண்டியது நமது கடமை எனவும் இவர்கள் குறிப்பிட்டனர்.

உள்ளூர் படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை ஊக்குவிக்கும் தருவாயில் மட்டுமே நல்ல படைப்புகள் வெளிவரும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

விளையாட்டுப் பசங்க, வெட்டி பசங்க படங்களை தொடர்ந்து வீடு நிறுவனம் வெடிகுண்டு பசங்க படத்தை தயாரிக்கிறது.  இந்த படத்தின் இயக்குநராக டாக்டர் விமலா பெருமாள், ஒளிப்பதிவாளராக பி.சிதம்பரம் ஆகியோர் பணியாற்றுகின்றனர். டெனிஸ் அவர்களோடு அபிமான உள்ளூர் கலைஞர்கள் சீலன், கலைவாணி, சங்கீதா உள்ளிட்டவர்கள்  இந்தப்படத்தில் தங்களது பங்களிப்பை அளித்து நம்மையெல்லாம் மகிழ்விக்கவிருக்கிறார்கள்.

வித்தியாசமான கதைக்களத்தோடு வெடிகுண்டு பசங்க படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகி நம்மை நாடி வரவிருக்கிறது. இந்தப்படத்தில் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் எல்லா அம்சங்களும் இடம் பெறும் என இந்தப்படத்தின் நாயகன் டெனிஸ் அவர்கள் தெரிவித்தார்.

Suggested Posts

No Comment

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *