பெண்ணினம் – பெண்களுக்கு ஓர் சமர்ப்பணம்
“பெண்ணினம்” பெண்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட குறும்படம். இக்குறும்படத்தை பினாங்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து இயக்கியுள்ளனர். இக்குறும்படத்தை தர்மராஜ் சிவா சண்முகம் கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
பள்ளி பருவத்தை முடித்தப் பின் நண்பர்கள் ஒன்றினைந்து செயல்படுவது மிகவும் அறிது. அந்த வகையில் நண்பர்கள் ஒன்றினைந்து குறும்படம் தயாரிக்க முயற்சித்துள்ளனர்.
தர்மராஜ் தனது பள்ளி பருவத்திலிருந்து கட்டுரை எழுத மிகவும் ஆர்வம் கொண்டதால் தனது கல்வி பருவம் முடித்த பின் பணிபுரிய தொடங்கியப் பின் நண்பர்களின் ஒத்துழைப்பில் கலை பயனத்தை தொடங்கியுள்ளார்.
அந்த வகையில், மணிமன்றத்தின் படைப்புக்காக “மாற்றம்” எனும் குறும்படத்தில் நடித்தேன். அதனைத் தொடர்ந்து, சுயமாகவே கதை எழுதி ” என் மொழி என் உயிர்” எனும் தமிழ் பள்ளியில் மாணவர்கள் இனைவதற்கு என்ன காரணம் எனும் கதைக்கலத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
பிறகு, சிறகுகள் எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார். காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. மக்களிடேயை நல்ல வரவேற்ப்பு வெற்றது. வலையொளியில் சுமார் 47 ஆயிரம் பார்வையாளர்களை ஈர்த்ததுள்ளது.
இதனிடையை, தாய்மொழி நாளிதழின் உள்ளூர் கலைஞர்களின் பகுதிக்காக ஒவ்வோரு வாரமும் நாளிதழ் வாங்கி படிப்பேன். ஒரு நாள் தாய்மொழி நாளிதழில் வெளிவந்த ஒரு நாள் விளம்பரத்தில் எம்.ஓ.வி புரோடக்ஸனின் உரிமையாளர் ரோக்கி பிள்ளையை தொடர்ப்புக் கொண்டதில் குறும்படத்தில் அவர் செய்த தவருகளை ஏவ்வாறு தவிர்த்து நல்ல குறும்படத்தை உருவாக்க ஆலோசனை வழங்கினர்.
அதன் பிறகு, முன்றாவது படமாக “கவிஞன்” எனும் குறும்படத்தை தனது தயாரிப்பு நிறுவனமான ஸ்ஆர்டி புரோடக்ஸன் வழி தயாரித்தேன். அந்த குறும்படத்திற்கு கிடைத்த கருத்துக்களைக் கொண்டு மீண்டும் முயற்சி செய்து “ஆபத்து” , “மதிப்பிற்குரியவன்” எனும் குறும்படங்களை தயாரித்து இயக்கினேன். இருப்பிணும், குறும்படத்தில் சில படத்தொகுப்பு பிரச்சனைகளைக் கொண்டிருந்தது. இருந்தாலும் மக்களுக்கு நல்ல கதையையும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு கதை கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் “பெண்ணினம்” எனும் குறும்படத்தை உருவாக்கியுள்ளனர்.
No Comment