Posts in category

Featured

Featured posts

சுங்கை, ஆக.06 : நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் ம இ கா அதன் பாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக வெளியான தகவல் தமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் அஃது கட்சியை பலவீனமான சூழலுக்கு இட்டுச் செல்ல பெரும் வாய்ப்பு இருப்பதாகவும் சமூக சேவையாளர் அர்ஜூணன் (பி.ஜெ.கே. பிபிடி) கருத்துரைத்தார். பாரம்பரியமாக ம இ கா இதுவரை போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற சாத்தியமற்ற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க ம இ கா முன் …

0 532

கோலாலம்பூர், ஆக. 07: நாடாளுமன்ற அமர்வின் கூட்டத் தொடரின் போது மின்புகை (vaping) பிடித்த வெளியுறவு அமைச்சர் தனது தவறுக்காக மன்னிப்பு கோரினார்.கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது வெளியுறவு அமைச்சரான டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் முன்புகை பிடித்தது தெரிய வந்தநிலையில் அவர் அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கோரினார். நாடாளுமன்றத்தில் எந்தவொரு உறுப்பினரும் கூட்டத்தொடரில் அமர்ந்திருக்கும் போது புகைபிடிக்கக்கூடாது என்பது வரையறை. இருந்த போதிலும் இத்தவற்றை இனி செய்ய மாட்டேன் என உறுதி அளிப்பதாகவும் அவர் மேலும் …

0 509

புந்தோங்,ஆக07: நம் சமூகத்தின் நாளைய நம்பிக்கைகளான இளம் தலைமுறை கற்றறிந்த சமூகமாய் மாற வேண்டும் என நினைவுறுத்திய புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் கல்வியில் சிறந்து விளங்குவதை முதன்மை இலக்காகவும் நம் இளம் தலைமுறையினர் கொண்டிருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். நாம் பொருளாதார ரீதியில் தனித்துவத்தை பெற வேண்டுமானாலும் இந்நாட்டில் கல்வி கற்ற சமூகமாக மாறினால்தான் அஃது பெரும் சாத்தியமாகும் எனவும் கூறிய அவர் புந்தோங் வாழ் இளைஞர்ளின் கல்வி பயணத்திற்கு தாம் எப்பவுமே துணையாகவும் …

0 586

ஈப்போ,ஜூன்20: இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் பேராக் மாநிலத்தில் டெங்கி சம்பவ எண்ணிக்கை 200 விழுகாடு உயர்ந்துள்ளது. இச்சம்பவ உயர்வு ஈப்போ மாநகரத்தை மையப்படுத்திய பகுதிகளில் தான் அதிகம் உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டில் இதே காலக்கட்டத்தில் 262 சம்பவங்களாய் இருந்த நிலையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 888 ஆக உயந்திருப்பதாக மாநில சுகாதாரம்,அறிவியல்,சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தொழில்நுட்பத்திற்காக ஆட்சிக்குழு உறுப்பினர் அமாட் சைடி முகமாட் டவுட் குறிப்பிட்டார். கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் எந்தவொரு மரண சம்பவமும் …

0 530

புந்தோங்,ஜூன்17: உதவி கேட்டு என் அலுவலகம் கதவுகள் தட்டப்படும் போது வந்தவர் எந்த சட்டமன்ற,நாடாளுமன்ற தொகுதியை சார்ந்தவர் என்னும் நிலையை தாம் ஒருபோதும் பார்ப்பத்தில்லை என தெரிவித்த புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் மக்களுக்குச் சேவை செய்வதையே தமது கடமையாக கருதுவதாக கூறினார். குடும்ப சூழலியல் காரணமாக வேறு தொகுதியிலிருந்து இங்கு வந்து உதவி கேட்ட திருமதி. வனிதா த/பெ கோவிந்தன் அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் பிறந்த ஒரு மாதமே ஆன குழந்தைக்குத் தேவையான அத்தியாவசிய …

0 578

தைப்பிங்,ஜூன்17: தைப்பிங் அயோத்தி ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் உடைப்பட்ட விவகாரத்தில் உண்மை தெரியாமல் உளறக்கூடாது என புந்தோங் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் இஸ்லாம் அல்லாதவர் விவகார பிரிவு ஆட்சிகுழு உறுப்பினரின் சிறப்பு அதிகாரியுமான ஆதி.சிவசுப்பிரமணியம் தெரிவித்தார். சம்மதப்பட்ட அந்த ஆலயம் உடைப்பட்டத்திற்கு தானோ அல்லது ஆட்சிக்குழு உறுப்பினர் போல் லியோங் அவர்களோ காரணியம் அல்ல.மாநில ஆட்சிக்குழு அலுவலகத்திலிருந்தோ அல்லது மாநில நில அலுவலகத்திலிருந்தோ சம்மதப்பட்ட ஆலயத்தை உடைப்பதற்காக நாங்கள் ஒருபோது எத்தகைய அறிக்கைகளையும் ஆலய நிர்வாகத்திற்கு …

0 576

பெண்களுக்கு யாரும் உரிமையை கொடுக்க வேண்டாம் – பறிக்காமல் இருந்தாலே போதும் மணிமாறன் பேச்சு!! (சிவாலெனின்) சுங்கை சிப்புட்,மார்ச்12:   நம்மை நம் கண்கள் வழிநடத்துவது போல் இந்த உலகை பெண்கள் தான் வழிநடத்துகிறார்கள்.பெண்களின் பங்களிப்பும் செயல்பாடும் இல்லாமல் போனால் இந்த உலகம் இருண்டுதான் போகும் என்பதை நினைவுறுத்திய ம இ கா சுங்கை சிப்புட் தொகுதி செயலாளார் கி.மணிமாறன் பெண்கள் இல்லாமல் இந்த உலகில் ஒரு அணுவும் அசையாது என்றார். உயிருக்குள் உயிரை வைத்து உலகின் மனித …

0 603

அமிட் கான் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது – பெற்றோர்கள் கோரிக்கை!! தாப்பா,மார்ச்08:அமிட் கான் இடைநிலைப்பள்ளியின் தமிழாசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றும் மாவட்ட கல்வி இலாகாவின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் சம்மதப்பட்ட ஆசிரியை தொடர்ந்து இதே பள்ளியில் நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடந்தாண்டு இப்பள்ளிக்கு மாற்றலாகி வந்த சம்மந்தப்பட்ட ஆசிரியர் ஓராண்டில் இப்பள்ளியில் இந்திய மாணவர்கள் மத்தியில் பெரும் மாற்றங்களை உருவாக்கியதோடு இந்திய மாணவர்களை சாதனையாளர்களாகவும் உருவாக்கியுள்ளார் என்பதையும் பெற்றோர்கள் சுட்டிக்காண்பித்தனர். …

0 1.1k

நாட்டின் விளையாட்டுத்துறையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பு அவசியம்!! (சிவாலெனின்) பீடோர்,மார்ச்04:விளையாட்டுத்துறையில் நாட்டின் புகழை ஓங்கிட செய்வதற்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாவதாக கூறிய தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி சியூ தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்துறன் அதற்கு சாத்தியமான நிலையில் இருப்பதாகவும் கூறினார். பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் 56வது விளையாட்டுப் போட்டியினை தொடக்கி வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.பள்ளி அளவிலும் மாவட்ட ரீதியிலும் சிறந்து விளங்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மாநிலம் மற்றும் …

0 572

தமிழ் மொழி மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி – முன்னாள் தலைமையாசிரியர் பெருமாள் பெருமிதம்!! (சிவாலெனின்) பீடோர்,பிப்23:”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,வாளோடும் முன் தோன்றிய மூத்த குடி” எனும் பெருமையை கொண்டிருக்கும் தமிழினத்திற்கு முகவரியாக, அடையாளமாக,அந்த இனத்தின் உயிராக இருக்கும் திகழும் தமிழ் மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்பதை ஒவ்வொரு தமிழனும் பெருமிதமாக சொல்லி பெருமைப்பட வேண்டும் என முன்னாள் தலைமையாசிரியர் க.பெருமாள் கூறினார். மொழி ஒரு இனத்தின் பண்பாட்டின் விழி.மொழி இல்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கையை …

0 568