Posts in category

செய்திகள்

செய்திகள் News

தாப்பா ரோட் கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளியில் பொங்கல் விழா

Read More

சிலிம் ரீவர்,ஜூலை21: சிலிம் ரீவர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ம இ கா போட்டியிட வேண்டும் என ம இ கா தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுவது,நமக்கும் அம்னோவிற்கு இடையிலான ஒற்றுமையை பாதிக்க செய்யும் என சமூக சேவையாளர் திரு.மு.அர்ஜூணன் தெளிவுப்படுத்தினார். சிலிம் ரீவர் சட்டமன்றம் தொடர்ந்து அம்னோவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.இந்நிலையில்,அத்தொகுதி இடைத்தேர்தலில் ம இ கா போட்டியிட வேண்டும் என்பது ஏற்புடையதாக இருக்காது.இது நமக்கும் அம்னோவிற்கும் இருக்கும் வலுவான உறவிற்கு பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. …

0 532

சிலிம் ரீவர்,ஜூலை21: சிலிம் ரீவர் சட்டமன்ற தொகுதியை அம்னோ யாருக்கும் விட்டுக் கொடுக்காது என அத்தொகுதியை சார்ந்த அம்னோவினர் உறுதியாக கூறி வருகின்றனர்.இது அம்னோவின் பாரம்பரிய தொகுதி.இத்தொகுதியில் அம்னோதான் போட்டியிடும் என கூறுகிறார்கள். அண்மையில், இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ குஷாரி அவர்கள் மரணமுற்றதை தொடர்ந்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற சாத்தியம் இருப்பதால் இத்தொகுதி மீது பல்வேறு அரசியல் கட்சிகள் குறி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில்,நடைபெறவிருக்கும் சிலிம் ரீவர் சட்டமன்ற தொகுதியில் ம இ கா …

0 535

ஈப்போ,ஜூலை21: சமயம் என்பது ஒரு இனத்தின் வரலாற்றை மெய்பிக்கும் சான்றாக இருப்பதால் இந்தியர்கள் தத்தம் சமயம் சார்ந்த விவகாரங்களில் தெளிவாகவும் முறையான பின்பற்றலையும் கொண்டிருக்க வேண்டும் என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார். மேலும்,சமயம் சார்ந்த நடவடிக்கைகள் போட்டிகளுக்காக இல்லாமல், அவை வாழ்வியல் நிலையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் பள்ளிகளிலும் ஆலயங்களிலும் சமயத்தை கட்டாயமாக கற்பிக்கும் பணியை அது சார்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதேவேளையில்,பேரா மாநில …

0 608

சுங்கை,ஜூலை21: நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் சுங்கை அல்லது பேராங் ஆகிய தொகுதிகளில் ம.இ.கா போட்டியிடும் தொகுதியில் உள்ளூர் வேட்பாளரை களமிறக்க வேண்டும் என ம.இ.கா-விற்கு கம்போங் ஹென்றா ம.இ.கா கிளை கோரிக்கை விடுத்தது. நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் ம.இ.கா மீண்டும் வெற்றி பெற வேண்டுமானால் உள்ளூர் வேட்பாளருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர்கள் ம இ கா தஞ்சோங் மாலிம் தொகுதி தலைவரான திரு.இரவியே அதற்கு சிறந்த தேர்வாக இருக்ககூடும் …

0 527

ஜூலை10:நாட்டின் 15வது பொதுத் தேர்தல் எந்நேரமும் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் சூழலில் ம இ கா பேராக் மாநிலத்தில் மீண்டும் வலுவான கட்சியாக உருவெடுக்க பேராங் சட்டமன்ற தொகுதியை குறி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டில் அத்தொகுதியை கெஅடிலான் வேட்பாளரிடம் ம இ கா இழந்தது.அதற்கு முன்னர் அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினராக டத்தோ கே.ஆர் நாயுடு ம இ காவின் பிரதிநிதியாக தேசிய முன்னணி சார்பில் தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2008ஆம் …

0 511

ஈப்போ,ஜூலை10: பெர்சத்து கட்சியை களைத்து விட்ட தன் உறுப்பினர் மீண்டும் அம்னோவில் இணைய வேண்டும் எனும் ஆலோசனை பின்னோக்கிய அரசியல் சிந்தனையின் வெளிபாடு என வர்ணித்த அக்கட்சியின் பேரா மாநில இளைஞர் பிரிவு தலைவர் முகமட் ஹபிஷ் முபின் முகமட் சாலே அந்நிலை ஏற்பட்டால் அஃது செமாங்காட் 46 கட்சி எதிர்நோக்கி அதேசூழலை எதிர்கொள்ள நேரிடும் எனவும் சுட்டிக்காண்பித்தார். கட்சியை களைத்து விட்டு அம்னோவில் இணையுங்கள் என கோருவது முதிர்ச்சியற்ற அரசியல் போக்கின் வெளிபாடு எனவும் குறிப்பிட்ட …

0 508

புந்தோங்,ஜூலை10: மக்களால் தேர்வு செய்யப்பட்ட நான் மக்களுக்கு சேவை செய்வதையே எனது அரசியல் கொள்கையாக கொண்டிருப்பதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டார்.ஜசெகவிலிருந்து வெளியேறியதால் எனது அரசியல் எதிர்காலம் கேள்விகுறியாகும் என சிலர் பிரச்சாரம் செய்தாலும் அவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் வழக்கம் போல் மக்கள் சேவையில் ஈடுப்பட்டு வருவதாக மேலும் கூறினார். இரு உயர்கல்வி மாணவர்களுக்கு கல்வி உதவி நிதி வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் சிவசுப்பிரமணியம் இதனை கூறினார்.பல்கலைக்கழகத்திற்கான நுழைவு கட்டணம் செலுத்த உதவிக்கோரிய மாணவி …

0 537

புந்தோங்,ஜூன்30: மக்கள் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கை புந்தோங் தொகுதியில் துளியும் குறையவில்லை.மாறாய், தொடர்ந்து தமக்கு மக்களின் ஆதரவு பெருகி வருவதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டார். புந்தோங் சட்டமன்ற தொகுதியில் தாம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் சேவையும் மக்கள் நலதிட்டங்களும் தன் மீதான செல்வாக்கையும் நம்பிக்கையையும் மக்கள் மத்தியில் நிலையான இடத்தை மெய்ப்பித்திருப்பதாக அவர் மேலும் கூறினார். ஜோகூர் பாருவில் மெட்ரிகுலேசன் கல்லூரியில் வாய்ப்பு கிடைத்திருக்கும் பிரெஷலா வேணி த/பெ சரவணனுக்கு கல்லூரிக்கான பதிவு …

0 529

கோலாலம்பூர்,ஜூன்23:நாங்கள் இன்னமும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை ஆதரிப்பதாகவும் துன் மகாதீர் பிரதமர் பதவி ஏற்ற 6 மாதங்களுக்கு பிறகு அஃது அன்வாரிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் எனவும் ஜசெகவும் அமானாவும் தெரிவித்தன. 6 மாதங்களுக்கு பிறகு பிரதமர் பதவி ஒப்படைப்பு ஒப்பந்தம் எழுத்துப்பூர்வமாக மேற்கொள்ளப்படும் எனவும் ஜசெக பொதுச் செயலாளர் லிம் குவான் எங் மற்றும் அமானா கட்சியின் தலைவர் மாட் சாபுவும் கூட்டாக குறிப்பிட்டார்கள். நடப்பியல் சூழலில் பாக்காத்தான் ஹரப்பான் அரசாங்கத்தை கைப்பற்ற இதுவொரு சாதுரியமான …

0 517

ஈப்போ,ஜூன்20: இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில் பேராக் மாநிலத்தில் டெங்கி சம்பவ எண்ணிக்கை 200 விழுகாடு உயர்ந்துள்ளது. இச்சம்பவ உயர்வு ஈப்போ மாநகரத்தை மையப்படுத்திய பகுதிகளில் தான் அதிகம் உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. கடந்தாண்டில் இதே காலக்கட்டத்தில் 262 சம்பவங்களாய் இருந்த நிலையில் இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 888 ஆக உயந்திருப்பதாக மாநில சுகாதாரம்,அறிவியல்,சுற்றுச்சூழல் மற்றும் பசுமை தொழில்நுட்பத்திற்காக ஆட்சிக்குழு உறுப்பினர் அமாட் சைடி முகமாட் டவுட் குறிப்பிட்டார். கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் எந்தவொரு மரண சம்பவமும் …

0 530