Posts in category

கல்வி

கல்வி Education

  புந்தோங்,ஜூலை01:மக்களுக்கு சேவை செய்வதை இலக்காக கொண்டு இயங்கிக் கொண்டிருக்கும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் தொடர்ந்து பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாடு தலங்களுக்கு மானியமும் வழங்கிக் கொண்டிருக்கிறார். அவ்வகையில்,புந்தோங் குரு கால்கிடார் தேசியப்பள்ளியின் சீரமைப்புப் பணிக்காக வெ.3500ரிங்கிட்டும் அதேவேளையில்,இங்குள்ள தாவித்தின் கூடாரம் தேவாலயத்தின் மேம்பாட்டுப் பணிக்காக வெ.30.000ரிங்கிட்டும் வழங்கினார். தொடர்ந்து,நிறைய பொது அமைப்புகளும் பள்ளிக்கூடம் மற்றும் வழிபாடு தலங்களுக்கும் மானியம் கட்டகட்டமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அதன் மூலம் அவர்களின் தேவைகள் நிறைவு செய்யப்படுவதாகவும் சிவசுப்பிரமணியம் கூறினார். மானியம் …

0 536

தாப்பா,ஜூலை02:கோவிட்-19 தொற்றினால் தற்காலியமாய் மூடப்பட்டிருந்த பள்ளிக்கூடங்களில் இன்று முதல் பாலர்ப்பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதாக தாப்பா ரோடு கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திரு.தியாரன் தெரிவித்தார். அரசாங்கமும் சுகாதார அமைச்சும் நிர்ணயம் செய்திருக்கும் வரையறையை முழுமையாக பள்ளிக்கூடம் பின்பற்றுவதாகவும் மாணவர்களி. பாதுகாப்பிற்கு தேவையான அடிப்படை பொருட்களும் போதுமான நிலையில் இருப்பதாகவும் கூறினார். மாணவர்களுக்கு இதுவொரு புதிய அணுகுமுறையாக இருந்தாலும் ஆசிரியர்களின் வழிகாட்டலில் மாணவர்கள் வழக்கத்திற்கு வந்துவிடுவார்கள் எனவும் குறிப்பிட்டார். மேலும்,மாணவர்களின் பாதுகாப்பில் பள்ளி …

0 525

தைப்பிங்,ஜூன்24:ஓலிரூட் தோட்ட மக்களின் அடிப்படை தேவைக்காகவும் அவர்களின் வாழ்வுரிமைக்காகவும் பேசியும்,எழுதியும்,போராடியும் வாழ்ந்த தமிழறிஞர் பாவலர் அ.பு.திருமாலனாரின் பெயரை தாமான் காயா தமிழ்ப்பள்ளிக்கு சூட்ட வேண்டும் என்னும் கோரிக்கையை மலேசியத் தமிழ்நெறிக் கழகம் முன் வைத்துள்ளது. ஓலிரூட் தோடத் தமிழ்ப்பள்ளி தற்போது தாமான் காயாவில் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய வடிவம் பெற்றுள்ள நிலையில் ஓலிரூட் தோட்டத்தில் பிறந்து வளர்ந்து அம்மண்ணை தமிழுக்குரிய மண்ணாய் உயிர்ப்பித்த பாவலர் அ.பு.திருமாலனாரின் பெயரை அப்பள்ளிக்கு சூட்டுவதே நனி சிறப்பாகும். அத்தோட்ட மக்களின் குடிநீர் …

0 558

கவியரசி மனோகரன் 11ஏ பெற்றார்! பீடோர்,மார்ச்15:பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளின் முன்னாள் அமைப்பாளர் மனோகரனின் மகள் கவியரசி எஸ்.பி.எம் தேர்வில் 11ஏ பெற்று சாதனைப்படைத்தார். இவர் தேர்வில் எடுத்த 11 பாடங்களில் 9 பாடங்களில் A+ எடுத்ததோடு இரு பாடங்களில் A நிலை தேர்ச்சியும் பெற்று பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்தார். Share on: WhatsApp

0 542

ஷோபனா மோகன் 10ஏ பெற்று சாதனை! சிலிம் ரீவர்,மார்ச்14: நாடு தழுவிய நிலையில் வெளியான எஸ்.பி.எம் தேர்வு முடிவுகளில் சிலிம் ரீவர் வட்டாரத்தில் மாணவி ஷாபனா மோகன் 10ஏ பெற்று சாதனை புரிந்தார். இவர் சிலிம் ரீவர் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவரும் ஆவார். சிறந்த தேர்ச்சியினை பதிவு செய்த ஷாபனா மோகன் தனது வெற்றிக்கு பக்கபலமாய் இருந்த பெற்றோர்கள்,ஆசிரியர்கள் உட்பட அனைவருக்கும் நன்றியை பதிவு செய்தார். Share on: WhatsApp

0 584

சுங்கை தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழி வாரம் – மாணவர்களுக்கு மும்மொழி அகராதி வழங்கப்பட்டது!! சுங்கை,மார்ச்15:தமிழ் மொழியின் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாகவும் மாணவர்கள் மத்தியில் தாய்மொழி ஆளுமையை ஆழமாய் பதிய செய்யும் நிலையிலும் அன்மையில் சுங்கை தோட்டத் தமிழ்ப்பள்ளியில் தமிழ் மொழி வாரம் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. தமிழ் மொழி வாரத்தின் போது தமிழ் மொழி சார்ந்தும் நமது பாரம்பரியம் மற்றும் பண்பாட்டினை உயிர்ப்பிக்கும் விளையாட்டுகளும் நடைபெற்ற வேளையில் மாணவர்களும் தங்களின் ஆளுமையினை திறன்பட வெளிப்படுத்தினார்கள். நடைபெற்ற …

0 579

அமிட் கான் இடைநிலைப்பள்ளி தமிழாசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது – பெற்றோர்கள் கோரிக்கை!! தாப்பா,மார்ச்08:அமிட் கான் இடைநிலைப்பள்ளியின் தமிழாசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றும் மாவட்ட கல்வி இலாகாவின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள் சம்மதப்பட்ட ஆசிரியை தொடர்ந்து இதே பள்ளியில் நீடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கடந்தாண்டு இப்பள்ளிக்கு மாற்றலாகி வந்த சம்மந்தப்பட்ட ஆசிரியர் ஓராண்டில் இப்பள்ளியில் இந்திய மாணவர்கள் மத்தியில் பெரும் மாற்றங்களை உருவாக்கியதோடு இந்திய மாணவர்களை சாதனையாளர்களாகவும் உருவாக்கியுள்ளார் என்பதையும் பெற்றோர்கள் சுட்டிக்காண்பித்தனர். …

0 1.1k

நாட்டின் விளையாட்டுத்துறையில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பு அவசியம்!! (சிவாலெனின்) பீடோர்,மார்ச்04:விளையாட்டுத்துறையில் நாட்டின் புகழை ஓங்கிட செய்வதற்கு தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்களிப்பு மிகவும் அவசியமாவதாக கூறிய தஞ்சோங் மாலிம் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி சியூ தமிழ்ப்பள்ளி மாணவர்களின் விளையாட்டுத்துறன் அதற்கு சாத்தியமான நிலையில் இருப்பதாகவும் கூறினார். பீடோர் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளியின் 56வது விளையாட்டுப் போட்டியினை தொடக்கி வைத்து பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.பள்ளி அளவிலும் மாவட்ட ரீதியிலும் சிறந்து விளங்கும் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மாநிலம் மற்றும் …

0 572

தமிழ் மொழி மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி – முன்னாள் தலைமையாசிரியர் பெருமாள் பெருமிதம்!! (சிவாலெனின்) பீடோர்,பிப்23:”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே,வாளோடும் முன் தோன்றிய மூத்த குடி” எனும் பெருமையை கொண்டிருக்கும் தமிழினத்திற்கு முகவரியாக, அடையாளமாக,அந்த இனத்தின் உயிராக இருக்கும் திகழும் தமிழ் மொழி உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்பதை ஒவ்வொரு தமிழனும் பெருமிதமாக சொல்லி பெருமைப்பட வேண்டும் என முன்னாள் தலைமையாசிரியர் க.பெருமாள் கூறினார். மொழி ஒரு இனத்தின் பண்பாட்டின் விழி.மொழி இல்லாத வாழ்க்கை ஒளியில்லாத வாழ்க்கையை …

0 568

தமிழ் வாழ்ந்தால் தமிழன் வாழ்வான் – தமிழ் மொழி தமிழனின் முகவரி!! (சிவாலெனின்) தாப்பா,பிப்23:ஓரு இனம் அதன் தொன்மையையும் அதன் பாரம்பரிய பண்பாட்டையுமந்தொடர்ந்து நிலைபெற செய்ய வேண்டுமானால் அந்த இனத்தின் மொழி வலுவாகவும் வாழ்வியல் மொழியாகவும் நிலைத்திருக்க வேண்டும் என கூறிய தாப்பா ரோடு கீர் ஜொஹாரி தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் தியாரன் தமிழ் வாழ்ந்தான் தமிழன் வாழ்வான் என்றும் நினைவுறுத்தினார். மொழி அழிந்தால்,அது சார்ந்த இனமும் அழிந்து விடும் என எச்சரித்த அவர் தமிழ் மொழி தமிழனின் …

0 573