Posts in category

அரசியல்

அரசியல் Politics

சுங்கை, ஆக.06 : நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் ம இ கா அதன் பாரம்பரிய தொகுதிகளை விட்டுக் கொடுக்க தயாராக இருப்பதாக வெளியான தகவல் தமக்கு அதிர்ச்சியளிப்பதாகவும் அஃது கட்சியை பலவீனமான சூழலுக்கு இட்டுச் செல்ல பெரும் வாய்ப்பு இருப்பதாகவும் சமூக சேவையாளர் அர்ஜூணன் (பி.ஜெ.கே. பிபிடி) கருத்துரைத்தார். பாரம்பரியமாக ம இ கா இதுவரை போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி பெற சாத்தியமற்ற தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு விட்டுக் கொடுக்க ம இ கா முன் …

0 532

கோலாலம்பூர், ஆக. 07: நாடாளுமன்ற அமர்வின் கூட்டத் தொடரின் போது மின்புகை (vaping) பிடித்த வெளியுறவு அமைச்சர் தனது தவறுக்காக மன்னிப்பு கோரினார்.கடந்த திங்கட்கிழமை நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது வெளியுறவு அமைச்சரான டத்தோஶ்ரீ ஹிஷாமுடின் முன்புகை பிடித்தது தெரிய வந்தநிலையில் அவர் அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கோரினார். நாடாளுமன்றத்தில் எந்தவொரு உறுப்பினரும் கூட்டத்தொடரில் அமர்ந்திருக்கும் போது புகைபிடிக்கக்கூடாது என்பது வரையறை. இருந்த போதிலும் இத்தவற்றை இனி செய்ய மாட்டேன் என உறுதி அளிப்பதாகவும் அவர் மேலும் …

0 509

புந்தோங்,ஆக07: நம் சமூகத்தின் நாளைய நம்பிக்கைகளான இளம் தலைமுறை கற்றறிந்த சமூகமாய் மாற வேண்டும் என நினைவுறுத்திய புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் கல்வியில் சிறந்து விளங்குவதை முதன்மை இலக்காகவும் நம் இளம் தலைமுறையினர் கொண்டிருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். நாம் பொருளாதார ரீதியில் தனித்துவத்தை பெற வேண்டுமானாலும் இந்நாட்டில் கல்வி கற்ற சமூகமாக மாறினால்தான் அஃது பெரும் சாத்தியமாகும் எனவும் கூறிய அவர் புந்தோங் வாழ் இளைஞர்ளின் கல்வி பயணத்திற்கு தாம் எப்பவுமே துணையாகவும் …

0 586

சிலிம் ரீவர்,ஆக07:இந்தியர்களின் ஆதரவும் அவர்களின் செல்வாக்கையும் நடப்பில் ம இ கா கொண்டிருப்பதை உறுதி செய்ய சிலிம் ரீவர் இடைத்தேர்தல் ஒரு களமாக உருவாகியிருப்பதாக பேரா மாநில ம இ கா தலைவர் டத்தோ வ.இளங்கோ நினைவுறுத்தினார்.ம இ காவின் பலத்தை நிரூபிக்க நடைபெறவிருக்கும் சிலிம் ரீவர் இடைத்தேர்தல் மிக முக்கியமான ஒன்றாக விளங்குவதாகவும் குறிப்பிட்டார். நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில் இந்தியர்களின் ஆதரவு மீண்டும் ம இ கா பக்கம் திரும்பியுள்ளது என்பதை சிலிம் ரீவர் …

0 561

புந்தோங்,ஆக06:நம்மிடம் இருக்கும் சொத்துகளை பறிக்கப்படலாம்,நமது உடமைகள் அபகரிக்கப்படலாம்.ஆனால்,நாம் கற்ற கல்வியை யாராலும் எதுவும் செய்ய முடியாது என குறிப்பிட்ட புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் நம் சமூகத்தின் சிறந்த மாற்றத்திற்கு கல்வியே மூலதனம் என்று நினைவுறுத்தினார். நாம் கல்வி கற்ற சமூகமாக மாறும் போது அஃது நம் சமூகத்தின் நிலையையும் உருமாற்றம் செய்வதோடு நமக்கான தனித்துவ அடையாளத்தையும் மெய்ப்பிப்பதாக அவர் மேலும் கூறினார்.அதேவேளையில்,நடப்பு சூழலில் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் திறனும் ஆளுமையும் அனைத்துலக ரீதியில் வெற்றிகளை குவித்து வருவது …

0 549

புந்தோங்,ஆக05:உதவியென கேட்போர்க்கு உதவுவதையே தனது சேவையின் அடையாளமாக கொண்டிருக்கும் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் உதவி பெறுவோரை நேரடியாக வீட்டில் சென்று உதவிநிதி வழங்குவதையும் தனது பாணியாக அவர் கொண்டிருக்கிறார். இம்மாதிரி உதவிகளை நேரடியாக வீடு தேடி சென்று கொடுக்கும் போது சம்மதப்பட்டவர்களின் குடும்ப சூழலையும் அறிந்துக் கொள்ள முடிவதோடு அவர்களுக்கு தேவையான சேவையை நிறைவாக வழங்கவும் அஃது வழிசெய்வதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தனது அறுவை சிகிச்சைக்காக நிதி உதவி கோரிய வி.அரிவழகனுக்கும் புற்றுநோய்க்கான தீவிர …

0 525

சிலிம் ரீவர்,ஆக06:நடைபெறவிருக்கும் சிலிம் ரீவர் இடைத்தேர்தலில் அம்னோ வேட்பாளர் யார் எனும் கேள்விக்கான விடை தெரியாமல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தொகுதி இளைஞர் பிரிவு தலைவருக்கு அவ்வாய்ப்பு கிட்டலாம் என நம்பப்படுகிறது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்களில் 40 விழுக்காட்டுக்கும் அதிகமாய் இளைஞர்களின் வாக்குகள் இருப்பதால் அம்னோ தொகுதி இளைஞர் பிரிவு தலைவர் முகமாட் அமீன் பின் ஓத்மானுக்கு அவ்வாய்ப்பை வழங்க கட்சி தலைமைத்துவம் ஆலோசித்து வருவதாகவும் நம்பப்படுகிறது. இளைஞர்களின் வாக்குகளை கவர இந்த பாணி மிகவும் அவசியமென …

0 563

சிலிம் ரீவர்,ஜூலை21: சிலிம் ரீவர் சட்டமன்ற இடைத்தேர்தலில் ம இ கா போட்டியிட வேண்டும் என ம இ கா தலைவர்கள் சிலர் கோரிக்கை விடுவது,நமக்கும் அம்னோவிற்கு இடையிலான ஒற்றுமையை பாதிக்க செய்யும் என சமூக சேவையாளர் திரு.மு.அர்ஜூணன் தெளிவுப்படுத்தினார். சிலிம் ரீவர் சட்டமன்றம் தொடர்ந்து அம்னோவின் கோட்டையாகவே இருந்து வந்துள்ளது.இந்நிலையில்,அத்தொகுதி இடைத்தேர்தலில் ம இ கா போட்டியிட வேண்டும் என்பது ஏற்புடையதாக இருக்காது.இது நமக்கும் அம்னோவிற்கும் இருக்கும் வலுவான உறவிற்கு பாதகத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. …

0 532

சிலிம் ரீவர்,ஜூலை21: சிலிம் ரீவர் சட்டமன்ற தொகுதியை அம்னோ யாருக்கும் விட்டுக் கொடுக்காது என அத்தொகுதியை சார்ந்த அம்னோவினர் உறுதியாக கூறி வருகின்றனர்.இது அம்னோவின் பாரம்பரிய தொகுதி.இத்தொகுதியில் அம்னோதான் போட்டியிடும் என கூறுகிறார்கள். அண்மையில், இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டத்தோ குஷாரி அவர்கள் மரணமுற்றதை தொடர்ந்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற சாத்தியம் இருப்பதால் இத்தொகுதி மீது பல்வேறு அரசியல் கட்சிகள் குறி வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில்,நடைபெறவிருக்கும் சிலிம் ரீவர் சட்டமன்ற தொகுதியில் ம இ கா …

0 535

ஈப்போ,ஜூலை21: சமயம் என்பது ஒரு இனத்தின் வரலாற்றை மெய்பிக்கும் சான்றாக இருப்பதால் இந்தியர்கள் தத்தம் சமயம் சார்ந்த விவகாரங்களில் தெளிவாகவும் முறையான பின்பற்றலையும் கொண்டிருக்க வேண்டும் என புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் கேட்டுக் கொண்டார். மேலும்,சமயம் சார்ந்த நடவடிக்கைகள் போட்டிகளுக்காக இல்லாமல், அவை வாழ்வியல் நிலையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் பள்ளிகளிலும் ஆலயங்களிலும் சமயத்தை கட்டாயமாக கற்பிக்கும் பணியை அது சார்ந்தவர்கள் ஆக்கப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டார். அதேவேளையில்,பேரா மாநில …

0 608